உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று நெய்மரை தொடர்ந்து மெஸ்ஸியும் விலகல்
2026ஆம் ஆண்டு (கனடா, மெக்சிகோ, அமெரிக்கா) நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கோப்பை தொடரின் தகுதி சுற்று ஆட்டத்தின் முக்கியமான 2 போட்டி களிலிருந்து காயம் காரணமாக அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி விலகியுள்ளார். 2022ஆம் ஆண்டு அர்ஜெண்டினா அணிக்கு உலகக்கோப்பையை பெற்றுக்கொடுத்த 37 வயதாகும் லயோனல் மெஸ்ஸி தற்போது இன்டர் மியாமி (அமெரிக்க கிளப்) அணிக்காக விளையாடி வருகிறார். இத்தகைய சூழலில் அடுத்த வாரம் நடை பெற உள்ள உருகுவே, பிரேசில் அணிக்கெதிரான தென் அமெரிக்க உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக்கான அர்ஜெண்டினா அணி அறிவிக்கப் பட்டுள்ளது. அதில் மெஸ்ஸியைத் தவிர்த்து 25 பேர் கொண்ட அணியை அந்நாட்டு பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனி அறிவித்தார். தொடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மெஸ்ஸி உரு குவே, பிரேசில் அணிகளுக்கு இடையே யான ஆட்டத்தில் இருந்து விலகி யுள்ளார். மெஸ்ஸியின் காயம் குறை வான தாக்கம் கொண்டது என்பதால் அவர் விரைவிலேயே குணமாகி மற்ற உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று போட்டிகளில் விளையாடுவார் என அர்ஜெண்டினா கால்பந்து அணி வட்டாரங்கள் மூலம் செய்திகள் வெளியாகியுள்ளன. இடது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரேசில் அணி யின் நட்சத்திர வீரர் நெய்மர் உல கக்கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத் தில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்து வீரருடன் மோதல் பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷாவுக்கு எச்சரிக்கையுடன் அபராதம்
பாகிஸ்தான் அணி நியூஸி லாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி-20 தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரின் முதலிரண்டு போட்டிகளில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், கடந்த ஞாயிறன்று நடைபெற்ற முதல் போட்டியின் 8ஆவது ஓவரின் போது பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் குஷ்தில் ஷா ரன் எடுக்க ஓடும்போது நியூஸிலாந்து பந்துவீச்சாளர் சாக் பௌல்க்ஸ் தோள்பட்டையின் மீது தேவையின்றி மோதினார். சர்வதேச போட்டி விதிகளை மீறிய குஷ்தில் ஷாவுக்கு போட்டிக் கட்ட ணத்தில் இருந்து 50% அபராதமும், 3 தகுதி இழப்பு புள்ளிகளும் வழங்கப் பட்டுள்ளது. போட்டி நடுவர் ஜெப் க்ரோவ் விதித்த தடைகளுக்கு குஷ்தில் ஷா ஒப்புக்கொண்டதால், அவருக்கு எந்த விசாரணையும் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சோகம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்
பாகிஸ்தான் வம்சாவளி யைச் சேர்ந்த ஜுனைல் ஸபர் கான் (இளம் வயது) என்ற கிரிக்கெட் வீரர் ஆஸ்திரேலியாவில் கிளப் போட்டிகளில் விளையாடி வந்தார். கான்கார்டியா கல்லூரி ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் பிரின்ஸ் ஆல்பிரட் ஓல்ட் கல்லூரி மற்றும் ஓல்ட் கான்கார்டியன்ஸ் அணி மோதின. இதில் ஜுனைல் ஓல்ட் கான்கார்டியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில், 40 ஓவர்கள் பீல்டிங் செய்துவிட்டு, 7 ஓவர்கள் பேட்டிங் செய்த பிறகு ஆஸ்திரேலிய நேரப்படி மாலை 4 மணியளவில் (திங்களன்று) ஜுனைல் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவரை கிளப் போட்டி நிர்வாகம் மருத்துவ மனையில் அனுமதித்தது. ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
என்ன காரணம்?
ஆஸ்திரேலியாவில் வெயில் சற்று குறைவாக தான் உள்ளது. அதாவது 25 டிகிரி செல்ஸியஸ் அளவில் தான் வெப்பநிலை உள்ளது. இதனால் ஹீட் ஸ்ட்ரோக் மூலம் ஜுனைல் கான் உயிரிழக்க வாய்ப்பில்லை. ஆனால் ரமலான் மாதம் என்பதால் ஜுனைல் கான் நோன்பு கடைபிடித்து வந்துள்ளார். ஒருவேளை நீர்சத்து மற்றும் இதர சத்துக்கள் இல்லாத காரணத்தினால் போதுமான அளவில் வெப்பத்தை எதிர்கொள்ளாமல் ஜுனைல் கான் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.