tamilnadu

img

காலதாமதமான சிகிச்சையால் பெண் சிசு மரணம்! ஆட்சியர் நேரில் விசாரணை

காலதாமதமான சிகிச்சையால் பெண் சிசு மரணம்!
ஆட்சியர் நேரில் விசாரணை

அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் இறந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். கடலூர் அருகே உள்ள சி.என்.பாளையத்தை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ். இவரது மனைவி மலர்விழி (வயது 30). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை கடந்த 14-ந் தேதி பிரசவத்திற்கு நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சூரிய பிரகாஷ் சேர்த்தார்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு மலர்விழிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதற் கிடையே குழந்தைக்கு மூச்சுத் திணறல்  ஏற்பட்டதாக கூறி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் குழந்தை திங்கள் கிழமை மாலை உயிரி ழந்தது. இதற்கிடையே சூரிய பிரகாஷ், கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், எனது மனைவி மலர்விழியை பிரசவத்திற்காக நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மார்ச் 14 அன்று அனுமதித் தேன். அங்கு மலர்விழியை பரிசோதனை செய்த மருத்துவர்கள்  குழந்தையும், தாயும் நல்ல முறையில் இருப்பதாக தெரிவித்தனர். சிறிது நேரத்தில் குழந்தையின் தலை பகுதி பிரசவித்த நிலையில், குழந்தை பிறப்பில் சிரமம் உள்ளதாக கூறி மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர். இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ்  சுமார் ஒரு மணி நேரம் காலதாமத மாகவே வந்தது. பின்னர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த சிறிது நேரத்தில் பெண் குழந்தை பிறந்தது. இருப்பினும் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறி சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பல னின்றி குழந்தை உயிரிழந்தது. அதனால் எனது மனைவிக்கு சரியாக சிகிச்சை பார்க்க தவறிய நடுவீரப் பட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்து வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் அரசு மருத்து வமனை மகப்பேறு பிரிவு மருத்து வர்கள் மற்றும் நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களை நேரில் அழைத்து குழந்தையின் இறப்பு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி னர். விசாரணை நடைபெறும் வரையில் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் வாயிலிலேயே காத்திருந்த னர்.