tamilnadu

img

பர்மிட் கட்டணத்தை குறைத்திடுக: டிப்பர் லாரி உரிமையாளர்கள் மனு

பர்மிட் கட்டணத்தை குறைத்திடுக: 
டிப்பர் லாரி உரிமையாளர்கள் மனு

பர்மிட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து பேசினர். கடலூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமை யாளர்கள் சங்க தலைவர் கருணாநிதி தலை மையில் ஒருங்கிணைப்பாளர் ஓம் பிரகாஷ், பொருளாளர் தர்மராஜ், துணைத் தலை வர்கள் துர்க்கை ரவி, முத்து, ரமேஷ் ஆகி யோர் முன்னிலையில் டிப்பர் லாரி உரிமை யாளர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு  வந்தனர். ஆட்சியரை சந்தித்து தங்கள் கோரிக்கை கள் தொடர்பாக பேசினர். அப்போது அவர்கள், கடலூர் மாவட்டத்தில் கிராவல் லாரிகளை குறிவைத்து பறிமுதல் செய்யப் படுகிறது. பர்மிட் கட்டணம் இரண்டு மடங்காக  உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தொழில் பாதிக்கிறது எனவே பர்மிட் கட்டணத்தை குறைக்க வேண்டும். டிப்பர் லாரிக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் இதுவரை தெரி விக்கப்படவில்லை. அதனால் என்னென்ன முறைகளில் கிராவல் லாரிகளை இயக்க வேண்டும் என்று கூறினால்,  அதன்படி நாங்கள் நடந்து கொள்வோம். அதிகாரிகள் தங்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்ய எங்களை பலிகடா ஆக்குகிறார்கள். இதனால் டிப்பர் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அதனால் உரிய வழிகாட்டு நெறிமுறை களை தெரிவித்தால் அதன்படி லாரிகளை இயக்கிக் கொள்வோம் என்றனர்.