அவதூறாக பேசிய பாஜக நிர்வாகிகள் கைது
கோவை, மார்ச் 18 – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக பாஜக நிர்வாகிகள் இருவர் கோவையில் கைது செய்யப்பட்டனர். சென்னையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, முதல மைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக பாஜக ஆன்மீக வளர்ச்சிப் பிரிவு மண்டலத் தலைவர் பி.துரை (43) மற்றும் பாஜக செல்வபுரம் மண்டல துணைத் தலைவர் ஏ. மணிவண்ணன் (49) ஆகிய இருவரை கோவை மாநகர காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இரு வரும் செவ்வாயன்று நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
ரயில்வே பாதுகாப்பும் அதன் தீர்வுகளும் கருத்தரங்கம்
அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்க தென்மண்டல மாநாடு செவ்வாயன்று, ஈரோடு சத்யம் மகாலில் நடைபெற் றது. இதில், ரயில்வே பாதுகாப்பும் அதன் தீர்வுகளும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. ரயில் ஓட்டுநர்கள் சங்க தென்மண்டல மாநாடு ஈரோட் டில் நடைபெற்றது. சேலம் கோட்டச் செயலாளர் எஸ்.அருண் குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். தென்மண்டலத் தலைவர் ஆர்.குமரேசன் தலைமை வகித்தார். மத்திய பொதுச் செயலா ளர் கே.சி.ஜேம்ஸ் தொடக்க உரை ஆற்றினார். தென்மண் டலச் செயலாளர் யு.பாபுராஜன் வேலை அறிக்கையையும், பொருளாளர் பி.ஜெகதீசன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து, மாலையில் ரயில்வே பாதுகாப்பு மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடை பெற்றது. இதில், அனைத்திந்திய இன்சூரன்ஸ் தொழிலாளர் கழக துணைச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், தென்னக ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுச் செயலாளர் வி.ஹரி லால், சதர்ன் ரயில்வே எம்ப்ளாயி சங்க பொதுச் செயலாளர் வி.கோபாலகிருஷ்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எச். ஸ்ரீராம் மற்றும் ரயில்வே கார்மிக் சங்க கோட்டப் பொருளா ளர் பி.கே.ஜெகதீசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும், ஸ்டேஷன் மாஸ்டர் அசோசியேசன் முன்னாள் பொதுச் செயலாளர் பி.சுனில்குமார், ஆர்எல்எல்எப் இணைச் செயலாளர் எஸ்.நரசிம்மன், ரயில்வே டிக்கட் செக்கிங் கவுன் சில் கே.வி.ரமேஷ், பென்சனர் அசோசியேசன் சி.முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முதல் நாள் இறுதியாக, கோட்டத் தலைவர் சீனிவாச பட் நன்றியுரை கூறினார். மாநாட்டின் இரண்டாம் நாளான செவ்வா யன்று ரயில் நிலையத்திலிருந்து மாநாட்டு அரங்கு வரை பிர திநிதிகள் பேரணி நடைபெறுகிறது.
பல ஆண்டுகளாக குடியிருக்கும்
மக்களுக்கு மனைப்பட்டா கேட்டு மனு
ஊட்டமலை பகுதியில் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வரும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், என வலியுறுத்தி, தருமபுரி ஆட்சியர் ரெ.சதீஷிடம் மழை வாழ் மக்கள் சங்கத்தினர் செவ்வாயன்று மனு அளித்த னர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை கிராமத்தில் சர்வே எண்:1111/2 இல், சுமார் 25 ஆண்டுகளுக்குக்கும் மேலாக 50க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். குடியிருக் கும் வீட்டிற்கு வரி செலுத்தி வருகின்றனர். மின் இணைப்பு வழங்கப்பட்டு, மின்கட்டனமும் செலுத்தி வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியிலினத்தை சேர்ந்தவர்கள். விவசாய நிலம் இல்லை. ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் மீன் பிடிப்பது, பரிசல் இயக்குவது, மசாஜ் செய்வது போன்ற வேலையை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களின் வருமா னம் அன்றாட தேவையை பூர்த்தி செய்யவே சரியாக உள் ளது. எனவே, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலை யிலுள்ள இம்மக்களின் நலன் கருதி, இவர்கள் குடியி ருக்கும் பகுதிக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும், என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன், துணைச் செயலாளர் என்.மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்ட னர்.