tamilnadu

img

ஊதியத்தை விட 4 மடங்கு உயர்ந்த விலைவாசி

மும்பை, அக். 25 - ஆரோக்கியமான உணவுக்கான செலவு,  ஊதியங்களை விட வேகமாக உயர்ந்துள்ளதை, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியான புதிய ஆய்வு ஒன்று வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அதாவது, கடந்த 2023 அக்டோபருடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் 2024 அக் டோபரில் சராசரி மனிதனின் வருமானத்தில் பெரும்பகுதி உணவுக்காகவே செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான உணவுப் பொருட்கள் விலை உயர்வால், அனைத்துத் தரப்பினருமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாலும், மாதச் சம்பளம் பெறும் தொழிலாளர்களை விட தினக்கூலித் தொழிலாளர்கள் மேலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊதிய உயர்வு 9 சதவிகிதம்;  விலை உயர்வு 52 சதவிகிதம்!

சராசரியாக, ஒரு ஆரோக்கியமான உண விற்காகும் செலவு, 2023 அக்டோபர் மாதத்தில்  இருந்ததைக் காட்டிலும், 2024 அக்டோபரில் 52 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆனால், இதே காலத்தில் சராசரி ஊதிய விகிதமோ 9 முதல் 10 சதவிகிதம் வரையே உயர்ந்துள்ளது. பொதுவாகவே மாத வருமானத்தில் சம்பளம் பெறும் தொழிலாளர்களை விட, தினக்கூலித் தொழிலாளர்கள் தங்களின் வரு வாயில் அதிகமான தொகையை உணவுக்காக செலவிடுகின்றனர் என்றாலும், இந்த இடை வெளி கடந்த ஆண்டில் மேலும் அதிகரித்துள் ளது. குறிப்பாக, குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய ஒரே நபராக பெண்கள் உள்ள வீடுகளில் இந்தச் சுமை மிக அதிகமாக உள்ளது. உணவுப் பொருட்கள் விலை உயர்வு தொடர்பான இந்த ஆய்வுக்கான தரவுகள் மும்பையில் இருந்து பெறப்பட்டுள்ளன. இங்கு மும்பை சந்தை கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டதற்கு, அங்கிருந்து தொடர்ச்சியான தரவுகள் கிடைத்ததே காரணமாகும். ஊதிய தரவுகளும் அதே மாநிலத்தில் இருந்தே எடுக்கப்பட்டன. கடந்த கால தரவுகள் இல்லாத தால் அசைவ உணவு பொருட்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

காய்கறிகளின் விலைகள்  89 சதவிகிதம் உயர்வு!

உணவுப் பொருட்களின் விலை உயர் வானது, பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்வுடன் நேரடியாக தொடர்புடையது. இதன்படி பார்த்தோமேயானால், தக்காளி, உரு ளைக்கிழங்கு மற்றும் பூண்டு விலைகள் இக்காலகட்டத்தில் கணிசமாக உயர்ந்துள்ளன. 2023 அக்டோபர் முதல் 2024 அக்டோபர் வரை யிலான காலத்தில் தக்காளி விலை 247 சத விகிதம், உருளைக்கிழங்கு விலை 180 சதவிகி தம் மற்றும் பூண்டு விலை 128 சதவிகிதம் அள விற்கு உயர்ந்துள்ளது.  சராசரியாக, உணவுக்காக பயன்படுத்தப் படும் அனைத்து காய்கறிகளின் சில்லரை விலை  89 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் காய்கறி அல்லாத பொருட்களின் விலை 1.5 சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில், துவரம் பருப்பு மற்றும் அரிசி விலை முறையே 2.6 சதவிகிதம் மற்றும் 0.7 சதவிகிதம் குறைந்துள்ளது. உப்பு,  சூரியகாந்தி எண்ணெய், கோதுமை போன்ற பிற பொருட்களின் விலை 3 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை மிதமான உயர்வையே கண்டுள்ளது.

உணவுத் தயாரிப்புக்கான  மொத்த செலவு உயர்வு

மகாராஷ்டிராவில் இரண்டு வேளை உணவு  தயாரிக்கத் தேவையான அனைத்து பொருட்களின் சராசரி செலவு இந்த ஆண்டு 154.4 ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டை  விட 52 சதவிகிதம் அதிகம் (ரூ. 101.8). அதா வது, மகாராஷ்டிராவில் ஒரு குடும்பத்தின் தினசரி இரண்டு வேளை உணவுத் தயாரிப்புக் கான மாதாந்திர செலவு 2023 அக்டோபரில் 3  ஆயிரத்து 053 ஆக இருந்தது 2024 அக்டோ பரில்  4 ஆயிரத்து 631 ஆக உயர்ந்துள்ளது. ‘தி இந்து’ நாளிதழின் Text & Context பகுதியில் வெளியான இந்த ஆய்வறிக்கை, மகாராஷ்டிராவில் உணவு செலவுகள் மற்றும் ஊதியங்கள் குறித்த ஒரு விரிவான ஆய்வை முன்வைக்கிறது. சாம்ரீன் வாணி, நிதிகா பிரான்சிஸ் மற்றும் விக்னேஷ் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

ஏழை - நடுத்தர மக்கள்  கடுமையாக பாதிப்பு

 ஒரு ஆரோக்கியமான உணவுக்கான செலவு  கடந்த ஆண்டில் 52 சதவிகிதம் அதிகரித்துள் ளது - இது 2023 அக்டோபரில் ரூ. 3 ஆயிரத்து 051 ஆக இருந்தது 2024 அக்டோபரில் ரூ. 4 ஆயிரத்து 631 ஆக உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்பு ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கைத் தரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை ஆரோக்கியமான உணவுக்கு, 1. அரிசி (மையப்பொருள்), 2. சாலட் (பச்சைக்  காய்கறிகள், வெள்ளரிக்காய், தக்காளி), 3. ஆலு சப்ஜி (உருளைக்கிழங்கு கறி), 4. கொத்து பாஜி (பரோட்டா உடன் காய்கறி கறி),  5. சமையலுக்கான சூரியகாந்தி எண்ணெய், 6. கூட்டுக் கறி வகைகள் ஆகியவை தேவை என்ற நிலையில், இவற்றின் விலையோ ஏழைகள் வாங்க முடியாத அளவிற்கு உச்சத்திற்குச் சென்றுள்ளது.

உச்சம் சென்ற தக்காளி,  உருளைக் கிழங்கு

இந்தக் காலத்தில் மிக அதிகமாக உயர்ந்த உணவுப் பொருட்கள் என்றால், 1. தக்காளி (247  சதவிகிதம்), 2. உருளைக்கிழங்கு (180 சதவிகி தம்), 3. துவரம் பருப்பு (180 சதவிகிதம்) ஆகிய வற்றைச் சொல்லலாம். மிதமாக விலை உயர்ந்த உணவுப் பொருட்கள் பட்டியலில் 1. பயறு வகைகள் (51 சதவிகிதம்), 2. கோதுமை (31.3 சதவிகிதம்), 3. வெங்காயம் (31.3 சதவிகிதம்) ஆகியவை வருகின்றன. மறுபக்கத்தில், சமையல் எண்ணெய்: 2.1 சதவிகிதம், அரிசி: 0.7 சதவிகிதம் என விலை குறைந்துள்ளன. மாதச் சம்பளம் பெறும் நிரந்தரத் தொழி லாளர்கள், 2023-ஆண்டில் நாள் ஒன்றுக்கு ரூ. 424  பெற்றனர். இது 2024-ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு  ரூ. 468 ஆக உயர்ந்துள்ளது. வருடாந்திர உயர்வு என்று பார்த்தால், 10.4 சதவிகிதம் தான். ஆனால், இவர்கள் உணவுக்காக தங்களின் வருவாயில் செலவிடும் தொகை: 22.2 சதவிகிதம் (4.9 புள்ளிகள் அதிகரிப்பு) வரை உயர்ந்துள்ளது. மோசமடைந்த தினக்கூலி தொழிலாளர்களின் நிலைமை  இதுவே, தினக்கூலி தொழிலாளர்களை எடுத்துக் கொண்டால், 2023-இல் நாள் ஒன்றுக்கு ரூ. 383 கூலி பெற்றனர். இது 2024-இல் நாள் ஒன்றுக்கு ரூ. 425 ஆக உயர்ந்துள்ளது. வருடாந்திர உயர்வு:  10.6 சதவிகிதம். ஆனால், இவர்கள், உண விற்காக செலவிடும் தொகை, அவர்களின் வரு மானத்தில் 31.4 சதவிகிதமாக (8.6 புள்ளிகள் அதிகரிப்பு) உள்ளது. இந்த ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த  உண்மைகள் என்று பார்த்தால், 1. உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஊதிய உயர்வை விட கணிசமாக அதிகம். 2. தினக்கூலி தொழி லாளர்கள் தங்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை உணவுக்காகச் செலவிட வேண்டிய நிலை உள்ளது. 3. காய்கறிகளின் விலை அதி கரிப்பு மிக அதிகம். அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி மற்றும் எண்ணெய் மட்டுமே சிறிது விலை குறைந்துள்ளது- என்ப வையே ஆகும். ஏழைகளுக்கு எட்டாத  ஆரோக்கியமான உணவு மேலும், 1. குடும்ப வரவு - செலவுத் திட்டத்தில் உணவுச் செலவு அதிக பங்கு வகிக்கிறது. 2. அதேநேரம் இந்த ஊதிய உயர்வு விலைவாசி உயர்வுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. 3. குறைந்த வருமானம் உள்ளவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். 4. ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுவது சவாலாக மாறியுள்ளது என்றும் ஆய்வு தெளிவு படுத்தியுள்ளது. இந்த ஆய்வு, பணவீக்கம் மற்றும் உணவுப்பாதுகாப்பு  தொடர்பான கொள்கை முடிவுகளுக்கு முக்கியமான உள்ளீடு களை வழங்குகிறது.  மகாராஷ்டிராவின் மும்பையை மையமாகக் கொண்டு உணவுப் பொருள் விலைஉயர்வு தொடர்பான இந்த  ஆய்வு நடத்தப் பட்டிருந்தாலும், மும்பை யிலேயே இது தான் நிலைமை என்ற அளவிற்கு- நாடு முழுவதும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தில் உணவு விலை உயர்வு ஏற்படுத்தும் தாக்கத்தை புரிந்து கொள்வதற்கு இது உதவியாக அமைந்துள்ளது.