tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உழைப்போர் உரிமை இயக்கம் திமுக கூட்டணிக்கு ஆதரவு

சென்னை: உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் பாரதி உள்ளிட்டோர் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து, சட்டமன்றத்  தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள னர். சென்னை மாநகராட்சியில் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட 1,400 தூய்மைப் பணியாளர்களை மீண்டும் கார்ப்பரேஷன் ஊழியர்களாக எடுத்துக் கொண்ட  முதல்வரின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கவும், பணி  நிரந்தரத்திற்கான கோரிக்கையை வலியுறுத்தவும் இந்த சந்திப்பு நடைபெற்றது என்று வழக்கறிஞர் பாரதி  தெரிவித்தார். தனியார் மயமாக்கப்பட்ட தொழிலா ளர்களை மீண்டும் அரசு நிறுவனத்தில் சேர்த்துக் கொண்ட  இது வரலாற்றில் முதல்முறை என்று அவர் வலியுறுத்தி னார்.  பணி நிரந்தரக் கோரிக்கையை முன்வைக்க மே 20 ஆம் தேதி பிரம்மாண்ட மாநாடு நடத்தவுள்ளதாகவும், யார்  ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கோரிக்கையில் சமரச மில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

தஞ்சை அருகே முதல்வர் வாகனத்தில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

தஞ்சாவூர்: தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிவிட்டது. கொளத்தூர் தொகுதி யில் போட்டியிடும் முதல்வர் ஸ்டாலின், திருவாரூரில்  இருந்து மார்ச் 31 அன்று தேர்தல் பரப்புரையை தொடங்கி னார். இதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள  தனது இல்லத்தில் இருந்து செவ்வாயன்று (மார்ச் 31)  அன்று காலை புறப்பட்டார். விமானம் மூலம் தஞ்சாவூர்  சென்று பிரச்சார வேனில் பயணம் மேற்கொண்டார்.  திருவாரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேனை  வழிமறித்த அதிகாரிகள், முதல்வர் அமர்ந்திருந்த முன்பகுதி கதவையும் பின்பகுதி கதவையும் திறந்து  முழுமையாக சோதனை நடத்தினர். வேனில் எதுவும்  இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகு, வாகனத்தை  செல்ல அனுமதித்தனர்.

தேர்தல் ஆணைய இணையதளத்தில்  தமிழ் புறக்கணிப்பு: கண்டனம்

சென்னை: தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான affidavit.eci.gov.in-இல் வேட்பா ளர் விவரங்களில் கட்சிகளின் பெயர்கள் ஆங்கிலம்  மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே பதிவிடப்பட்டு உள்ளன. தமிழில் எந்தவிதக் குறிப்பும் இல்லாதது பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத்  தேர்தலில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவிருக் கும் நிலையில், இதுவரை சுமார் 561 வேட்பாளர்களின் விவ ரங்கள் பதிவாகியிருந்தன. மாநிலத்தின் தாய்மொழிக்கு முன்னுரிமை தரப்படவேண்டும் என்று அரசியல் கட்சி கள் வலியுறுத்துவதோடு, தேர்தல் ஆணையம் உடனடி யாக தலையிட்டு வேட்பாளர் விவரங்களில் தமிழையும்  

சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் தொடர்பான போலி செய்தி: சைபர் கிரைம் எச்சரிக்கை

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதாகக் கூறி போலி இணையதள இணைப்புகளுடன் குறுஞ் செய்திகள் பரவி வருவதாக சைபர் கிரைம் காவல்துறை யினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இத்தகைய இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம் வங்கித் தகவல்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகள்  திருடப்படும் ஆபத்து உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் தனிப்பட்ட இணைப்புகளை குறுஞ்செய்தி மூலம் அனுப்புவதில்லை என்று அதிகாரிகள் தெளிவு படுத்தியுள்ளனர்.  வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி  செய்ய அதிகாரப்பூர்வ Voters Service Portal இணைய தளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மோசடி நடந்தால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ள  வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு புதிய பணி ஒதுக்கீடு

சென்னை: தேர்தல் ஆணையத்தால் இட மாற்றம் செய்யப்பட்ட 8  ஐ.பி.எஸ். அதிகாரி களுக்கு புதிய பணி  ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விருதுநகர் முன்னாள் எஸ்.பி. கண்ணன் சென்னை காவல்துறை நல்வாழ்வு  பிரிவு உதவி ஆணைய ராகவும், நாகை முன் னாள் எஸ்.பி. பால கிருஷ்ணன் பெருநகர சென்னை காவல் தலைமையக துணை ஆணையராகவும் நிய மிக்கப்ப ட்டுள்ளனர்.

தவெக வேட்பாளர் மீது பாலியல் புகார்

சென்னை: தமிழக  வெற்றிக் கழகம் வெளி யிட்ட வேட்பாளர் பட்டிய லில் பூவிருந்தவல்லி தொகுதிக்கு அறிவிக்கப் பட்ட, திருவள்ளூர் தெற்கு தவெக மாவட்டச்  செயலாளர் பிரகாசம் என்ற குட்டி மீது கட்சி யின் பெண் நிர்வாகி பாலி யல் புகார் அளித்து உள்ளார்.  கட்சி தலை மையிடம் புகார் கொடுத் தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்ற பாதிக் கப்பட்ட பெண், மார்ச் 30 அன்று கணவருடன் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். பிர காசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப் பட்டுள்ளது.

ஐஐடி முதுகலைப்  படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை  ஐஐடியில் 2026-27ஆம் கல்வியாண்டுக்கான எம்.டெக், எம்.எஸ்.சி., எம்.ஏ. படிப்புகளில் சேர  ஏப்ரல் 27 வரை விண் ணப்பிக்கலாம். விண் வெளிப் பொறியியல், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள், ரோபோட்டிக்ஸ், செமி கண்டக்டர் தொழில்நுட் பம், கடல்சார் பொறியி யல் உள்ளிட்ட 34 வித மான எம்.டெக். படிப்பு கள் உள்ளன. ‘கேட்’ (The Common  Admission Test -  CAT) தேர்வில் தேர்ச்சி  பெற்றவர்கள் https:// mtechadmiitm.ac.in மூலம் விண்ணப் பிக்கலாம். மே இரண்டாம் வாரத்தில் முதல் சுற்று மாணவர் சேர்க்கை நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிமீறல்:  விஜய் மீது  வழக்குப் பதிவு

சென்னை: பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்த தமிழக வெற்றிக் கழகத்  தலைவர் ஜோசப் விஜய், அன்றே பெரம்பூர்  மற்றும் கொளத்தூர் தொகுதிகளில் பிரச்சாரம்  மேற்கொண்டார். வில்லிவாக்கம் தொகுதியிலும்  பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை  என்று கூறி அக்கூட்டம் ரத்து செய்யப் பட்டது.  கொளத்தூரில் 30 ஒலி பெருக்கிகளை  பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு  ஏற்படுத்தியதாகவும், ஆம்புலன்ஸ் செல்லும்  பாதையை மறைத்ததாகவும் நிலை கண்காணிப்பு  குழு அதிகாரி குமார் அளித்த புகாரின் அடிப்ப டையில், பெரவள்ளூர் காவல் நிலையத்தில் 5  பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.