tamilnadu

img

விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடக்கம்

13ஆவது சீசன் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் ஞாயிறன்று நிறைவு பெற்ற நிலையில், 2 நாட்கள் விடுமுறைக்குப் பின் புதன்கிழமை அன்று அரையிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 4 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி 9ஆவது முறையாக இறுதிக்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்குகிறது. அதே போல உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இறுதிக்கு முன்னேறும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா அணி களம் காண்கிறது. எனவே இரு அணிகளும் இறுதிக்கு முன்னேற தீவிர பயிற்சியுடன் களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடம் : கவுகாத்தி, அசாம் நேரம் : மதியம் 3:00 மணி (புதன்)

இரண்டு ஆட்டங்களும் ; ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

இனி இந்தியாவில் மட்டுமே ஆட்டங்கள்

மண்ணீரலில் காயம் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் நலமுடன் உள்ளார்

ரான 3ஆவது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்ரேயாஸ், அலெக்ஸ் கேரி அடித்த பந்தை அபார மாக பாய்ந்து கேட்ச் பிடித்தார். கேட்ச் பிடித்த பொழுதே ஸ்ரேயாஸ் நிலை  தடுமாறி கீழே விழுந்தார். இதனால் ஸ்ரேயாஸின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக ஸ்கேன் எடுக்க சென்றார். ஸ்கேனில் ஸ்ரேயாஸுக்கு விலா எலும்பு உடைந்து, ரத்தக் கசிவுடன் மண்ணீர லில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது.  இதனையடுத்து ஸ்ரேயாஸ் சிட்னி நகரில் உள்ள ஒரு மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மண்ணீ ரலில் ஏற்பட்ட காயம் உயிருக்கே ஆபத்து என்பதால் அவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) மருத்துவர்கள் உட்பட பலரும் கண்காணித்து வருகின்றனர்.  இந்நிலையில், ஸ்ரேயாஸ் உடல்நிலை குறித்து இந்திய டி-20 அணி யின் கேப்டன் சூர்யகுமார் கூறுகை யில், “ஸ்ரேயாஸின் காயம் தொடர் பாக பிசிசிஐ பிசியோ தெரபிஸ்ட் கமலேஷ் ஜெய்னிடம் விசாரித்தேன். அவர் ஸ்ரேயாஸ் நன்றாக இருப்ப தாக கூறினார். இன்னும் சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் ஸ்ரேயாஸ் இருக்க வேண்டும். அவர்  அனைவருடனும் பேசிக் கொண்டு தான் இருக்கிறார். அவரது உடல்நல னுக்கு பெரியளவில் எந்த பிரச்சனை யும் இல்லை” என அவர் கூறினார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்  9 பதக்கங்களை குவித்த இந்தியா

23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் ஐரோப்பா நாடான செர்பியாவின் முக்கிய நகரான நோவி சாட்டில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா சார்பில் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், திங்களன்று கடைசி நாளில் ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுஜீத் கல்கல், உஸ்பெகிஸ்தான் வீரரை 10-0 என்ற புள்ளிகள் கணக்கில் அதிரடியாக வீழ்த்தி தங்கப்பதக்கம்  வென்று அசத்தினார். இறுதியாக இந்த தொடரில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 6  வெண்கலம் என 9 பதக்கங்களை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.