மகளிர் தின கருத்தரங்கம்
மகளிர் தினத்தையொட்டி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கருத்த ரங்கம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் எஸ்.பாவனி தலைமை வகித்தார். கருத்த ரங்கத்தில் பங்கேற்ற மாநில பொருளாளர் ஜி.பிரமிளா, “கண்ணியத்துடன் கூடிய வாழ்க்கை நமது உரிமை” என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். முன்னதாக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பா.கோமதி, சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.மாலதி ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.