tamilnadu

img

ஜனநாயக வழிமுறைகள் மூலம் பாஜகவை அதிகாரத்திலிருந்து அகற்றுவோம்!

ஜனநாயக வழிமுறைகள் மூலம் பாஜகவை அதிகாரத்திலிருந்து அகற்றுவோம்! திரிபுராவில் சிபிஎம், சிஐடியு தலைவர்கள் உறுதி

“செங்கொடி”  என்றாலே பாஜகவுக்கு பயம்!

சிஐடியு மாநாட்டை முன்னிட்டு திரிபுரா தலைநகர் அகர்தலாவில் உள்ள  சுவாமி விவேகானந்தர் மைதானத் தில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையி டம் முதலில் அனுமதி கோரப்பட்டது. சுவாமி விவேகானந்தர் மைதானம் மிகப்பெரியது என்ற நிலையில், இந்த மைதானத்தில் அனு மதி மறுத்த ஆளும் பாஜக அரசு அகர்த லாவின் ஓரியண்ட் சவுமுஹுனியில் பொ துக்கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் எனக் கூறியது. மேலும் ஓரியண்ட் சவு முஹுனி நோக்கி வந்த வாகனங்களை வந்த வழியாக மிரட்டி திருப்பி அனுப்புதல், பாஜ கவின் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் போன்ற வடிவங்களில் உருவாக்கப்பட்ட தடைகளை மீறி சிபிஎம் மற்றும் சிஐடியு ஊழி யர்கள் மற்றும் தொழிலாளர்கள், பொது மக்கள் செங்கொடியுடன் திரண்டு என ஓரியண்ட் சவுமுஹுனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தை மாபெரும் வெற்றிப் பொதுக்கூட்டமாக மாற்றினர்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் 16ஆவது சிஐடியு (இந்திய தொழிற்சங்க மையம்) மாநில மாநாடு திங்கள், செவ்வாய் என 2 நாட்கள் நடைபெற்றது. இந்த மாநா ட்டுக்கு முன்னதாக திங்களன்று திரிபுரா தலைநகர் அகர்தலாவில் உள்ள ஓரியண்ட் சவுமுஹுனியில் பிரம்மாண்ட பேரணியுடன் பொ துக்கூட்டம் நடைபெற்றது. மாநாடு தொடக்கத்தைக் குறிக்கும் இந்தப் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வரும், முன்னாள் முதலமைச்சரு மான மாணிக் சர்க்கார், திரிபுரா எதிர்க்கட்சித் தலைவரும், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னருமான ஜிதேந்திர சவுத்ரி, சிஐடியு அகில இந்திய  பொதுச் செயலாளர் தபன் சென், சிஐடியு மாநிலத் தலைவர் மாணிக் டே, மாநிலச் செயலாளர் பிரசாத் தத்தா, மேற்கு வங்க சிஐடியு பொ துச் செயலாளர் அனாதி சாஹு உள்ளிட்ட சிபிஎம், சிஐடியு தலை வர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கானோர் பங் கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில்  தலைவர்கள் பேசுகையில், “நாட்டின் வளங்களை கார்ப்பரேட்களிடம் ஒப்படைத்து மத்தியிலும், மாநி லத்திலும் பாஜக தலைமையிலான அரசாங்கங்கள் பொருளாதா ரத்தை திவாலாக்கியுள்ளன. வேலையின்மை படித்த இளை ஞர்களிடையே ஆபத்தான நிலை யை எட்டியுள்ளது. அமெரிக்க ஏகா திபத்தியங்களுக்குப் பின்னால் நின்று, அம்பானி மற்றும் அதானி போன்ற கார்ப்பரேட் தொழி லதிபர்களுக்கு நாட்டின் விலை மதிப்பற்ற வளங்களை ஒப்படைப் பதன் மூலம், பாஜக அரசாங்கங்க ளால் நாடு முற்றிலும் அழிக்கப்படு கிறது. அதனால் மத்தியத்திலும் மாநிலங்களிலும் உள்ள பாஜக அரசாங்கத்தை ஜனநாயக வழி முறைகள் மூலம் அதிகாரத்திலி ருந்து அகற்ற வேண்டும். மக்களு டன் இணைந்து அகற்றுவோம். இல்லையெனில் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு அழிக்கப் படும். மேலும் நாட்டில் சாதி மற்றும் மத அடிப்படையில் பல பிளவுகள் ஏற்படும்.  2018ஆம் ஆண்டு பாஜக ஆட்சி க்கு வந்ததிலிருந்து திரிபுரா முழு வதும் சிபிஎம், சிஐடியு அலுவல கங்கள் மற்றும் தலைவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரு கின்றன. குறிப்பாக நூற்றுக் கணக்கான அலுவலகங்கள் அழிக்கப்பட்டு தீக்கிரையாக் கப்பட்டுள்ளன. மக்கள் பாஜகவின் விளையாட்டுகளைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். எதிர்த்துப் போராடத் தயாராக உள்ளனர். திரிபுராவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி களின் தவறான ஆட்சிக்கு எதிராக சிபிஎம் மற்றும் சிஐடியு போன்ற அதன் சார்பு அமைப்புகள்  மக் களை அணிதிரட்டும்” என உறுதி அளித்தனர்.