மக்களுக்கு எதிரான போராக மாறிவரும் எஸ்.ஐ.ஆர்-ஐ கைவிட வேண்டும்! தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எம்.ஏ. பேபி கடிதம்
புதுதில்லி, பிப்.14- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த செயல்பாட்டைக் கை விட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் எம்.ஏ. பேபி, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், தலை மைத் தேர்தல் ஆணையருக்கு விரி வான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் எம்.ஏ. பேபி கூறியிருப்பதாவது: தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆழமான கவலையை மீண்டும் ஒரு முறை உங்களிடம் முன்வைக்கிறோம். வாக்காளர் பட்டியல்களை அவ்வப்போது திருத்துவது ஒரு வழக்கமான மற்றும் அவசியமான ஜனநாயக செயல்பாடு என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதே சமயத்தில், தற்போதைய சிறப்பு தீவிரத் திருத்தம் அமல் படுத்தப்படும் விதமானது, கடந்த கால நடைமுறைகள் மற்றும் அரசி யலமைப்பு கோட்பாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. ஒரு வழக்கமான, வெளிப்படையான மற் றும் குடிமக்களுக்கு எளிதான செயல்முறையாக இருப்பதற்குப் பதிலாக, தற்போதைய எஸ்.ஐ.ஆர். குழப்பமான, தன்னிச்சையான மற்றும் மக்களைப் புறக்கணிக்கும் ஒரு செயல்பாடாகவும், வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மை, வாக்களிக்கும் அடிப்படை உரிமை ஆகிய இரண்டையும் அச்சுறுத்தக் கூடியதாகவும் மாறியுள்ளது. நம்பகமற்ற காலக்கெடு தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும்போது, நடைமுறைக்கு மாறான வகையில் மிகக் குறுகிய காலக்கெடுவிற்குள் ஒரு விரிவான மற்றும் ஆழமான திருத்தப் பணி யை மேற்கொள்கிறோம் என்பது, தேர்தல் சூழலையே கெடுப்பது டன், வாக்காளர் பட்டியலில் பெரிய அளவிலான பிழைகள் ஏற்படுவதற் கான மற்றும் பெயர்கள் நீக்கப்படு வதற்கான ஆபத்தை ஏற்படுத்தி யுள்ளது. எஸ்.ஐ.ஆர். செயல்முறையா னது, வாக்குச்சாவடி நிலை அதிகாரி களை அழுத்தத்திற்கு ஆளாக்கி இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, பல இடங்களில் அவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளவும் வழி வகுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் பல வாக்காளர்களும் மன உளைச்ச லுக்கு ஆளாகி இதேபோன்ற முடிவை எடுத்துள்ளது மிகுந்த துய ரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலோசனை இல்லாமை நாங்கள் உங்களுக்கு வழங்கிய ஆரம்ப மனுவில் சுட்டிக்காட்டியது போல, எஸ்.ஐ.ஆர். செயல்முறை களைத் துவங்குவதற்கு முன்பு, நமது நாட்டில் ஜனநாயக செயல் முறையின் சம பங்குதாரர்களாக இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட அர சியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணை யம் எவ்விதமான ஆலோசனையை யும் மேற்கொள்ளவில்லை. வாக்காளர்கள் மீதான சுமை தகுதியற்ற வாக்காளர்களைக் கண்டறிந்து நீக்குவதற்கான பொறுப்பு பொதுவாக வாக்குஙச சாவடி நிலை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பதிவு அதிகாரிகள் (Electoral Registration Officers) ஆகியோரிடமே உள்ளது. ஆனால், ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கு ‘மீண்டும் உங்களின் தகுதியை நிரூ பியுங்கள்’ என்று சுமையை சுமத்து வதும், தவறினால் நீக்கப்படுவீர்கள் என்று அச்சுறுத்துவதும் தன்னிச் சையானது; சட்டவிரோதமானது மற்றும் நடைமுறைக்கு முரணா னது. மோசமான அனுபவம் எஸ்.ஐ.ஆர். செயல்முறையை அமல்படுத்தும்போது பீகாரிலும், தற்போது எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்படும் பிற மாநிலங்க ளிலும் பல சிக்கல்கள் எழுந்துள் ளன. கணக்கெடுப்புப் படிவங்களை வழங்காதது, மாற்று நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை தராதது, தேவையற்ற ஆவணங்களைக் கோரியது ஆகியவற்றுடன் குறை வான டிஜிட்டல் வசதிகள் ஆகி யவை பட்டியலிலிருந்து வாக்கா ளர்கள் நீக்கப்படுவதற்கு வழி வகுத்துள்ளது. விளிம்புநிலை மக்கள் மற்றும் சிறுபான்மையினர், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பெண்கள், விகிதாச்சார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். பீகாரில் குறிப்பிட்ட சதவிகிதம் மக்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது போல, மற்ற மாநி லங்களிலும் இது நிகழலாம் என்று நாங்கள் அஞ்சு கிறோம். அதேபோல பெயர் நீக்கத்திற்கான படிவம் 7, தனிநபர்களால் பரவலாக தவறாகப் பயன்படுத்தப் படும் அவலம் உள்ளது. அசாம், ராஜஸ்தான் மற்றும் வேறு சில மாநிலங்களில் ஒரு தனிநபரே, நூற்றுக்க ணக்கான படிவங்களை போலியாக தாக்கல் செய்தது தெரியவந்துள்ளது. மேலும், சிறப்பு தீவிர திருத்தமும் அதன் செயல் படுத்தப்படும் விதமும், ஒன்றிய அரசால் முன் மொழியப்பட்ட தேசியக் குடிமக்கள் பதிவேட்டை (National Register of Citizens) ஒத்திருக்கிறது. இது குறிப்பிட்ட சில சமூகத்தினர் வாக்குரிமையை இழக்க வழிவகுக்கிறது என்கிற எங்கள் அச்சத்தை உண்மை யாக்கி வருகிறது. மாநில வாரியான அனுபவங்கள் அசாம் : அசாமில், தேர்தல் புகைப்பட அடையாள அட்டை மற்றும் மொபைல் எண்களைத் தவறாகப் பயன்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட பெருமளவிலான மூன்றாம் தரப்பு ஆட்சேபணைகள் மூலம் படிவம் 7 பரவலாக தவறாகப் பயன்படுத்தப்படுவதாக தெரி விக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபூமி (கரிம்கஞ்ச்) போன்ற மாவட்டங்களில், தனி நபர்கள் நூற்றுக்கணக்கான ஆட்சேபணைகளை தாக்கல் செய்துள்ளனர். வங்க மொழி பேசும் முஸ்லிம் வாக்காளர்களை நீக்குவ தற்கு, வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளை அரசியல் நடிகர்கள் அழுத்தம் கொடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன ஊடகச் செய்திகளும் வெளியாகி யுள்ளன. கேரளம் : கேரளத்தில் பட்டியலிலிருந்து தவறாக நீக்கப்பட்ட வாக்காளர்கள், படிவம் 6-ஐப் பயன்படுத்தி புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களின் பழைய வாக்காளர் பட்டி யல்கள் செல்லாதவையாகி, அவர்கள் புதிய வாக்கா ளர்களாகக் கருதப்படுகிறார்கள். தேர்தல் ஆணை யத்தின் 2002-க்கு முந்தைய வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி, 2002-க்குப் பிறகு பதிவு செய்தவர்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப் பப்படுகின்றன. படிவங்கள் 6, 6ஏ மற்றும் 8 ஆகிய வற்றை பயன்படுத்த வேண்டியவர்களின் அசாதா ரணமான எண்ணிக்கை, பெரிய அளவிலான தொகுதி மாற்றங்கள் மற்றும் தரவுகளை வெளியிடு வதில் வெளிப்படைத்தன்மை இல்லாதது ஆகியவை கடுமையான கவலைகளை எழுப்புகின்றன. தமிழ்நாடு : தமிழ்நாட்டில் 97 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் அடிப்படை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகபட்சமானவர்கள், ‘இறந்தவர்கள்’ அல்லது ‘கண்டுபிடிக்க முடியாதவர்கள்’ என்று வகைப்படுத் தப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். இது நம்பத்தகுந்த மக்கள் தொகை போக்குகளை விட அதிகமாக உள்ளது. நீக்கப்பட்டவர்களின் பெயர்களை கண்டு பிடிப்பதற்கு பட்டியல்கள் கிடைக்கவில்லை. இவற்றை அரசியல் கட்சிகள் சரிபார்ப்பதற்கும் பொருத்தமான தரவுகள் வழங்கப்படவில்லை. இதனால், திருமண மான பெண்கள், வாடகை வீடுகளில் குடியிருப்பவர் கள் மற்றும் இடம்பெயர்ந்த நபர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் ‘தர்க்க ரீதியான முரண்பாடுகளை’ அறிவதற்கு சோதிக்கப் படாத மற்றும் தெளிவற்ற மென்பொருள் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது, இது மாண்புமிகு உச்ச நீதி மன்றத்தின் முன் செய்யப்பட்ட பிரதிநிதித்து வங்களுக்கு மாறாக, பெருமளவிலான, தானியங்கி அறிவிப்பு உருவாக்கத்திற்கு வழிவகுக்கிறது. கிட்டத்தட்ட 1.5 கோடி வாக்காளர்களைப் பாதிக்கும் வகையிலான விஷயத்தில், தேர்தல் அதிகாரிகள், குறுகிய காலக்கெடுவுக்குள் நீதித்துறை சார்ந்த முடி வுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனைக் காட்டி, தேர்தல் ஆணையத்தின் வழக்க மான வழிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகை யில் நுண் பார்வையாளர்கள் என்ற பெயரில் ஒரு மாற்று அமைப்பு மாநிலத்தில் நடைமுறைப்படுத் தப்பட்டு உள்ளது. வழக்கமான தேர்தல் ஆணையக் கட்டமைப்பு ஓரங்கட்டப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் சிறப்பு தீவிர திருத்தம் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் கனவுகளை கடந்து செல்கின்றனர். மேலும் பல வாக்காளர்கள் அதைச் சமாளிக்க முடியாமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். சட்டக் கவலைகள் வாக்காளர் சேர்க்கைக்கு குடியுரிமை ஒரு முன் நிபந்தனையாக இருந்தாலும், அதன் முடிவு இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பிற்குள் வராது. ஆனால், சிறப்பு தீவிர திருத்தம் என்ற போர்வையில் குடியுரிமையை தீர்மானிப்பதற்கான செயல்முறையையே துவங்கியிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதனை உறுதிப் படுத்துவதாக அசாம் முதலமைச்சரின் பேச்சுக்கள் அமைந்துள்ளன. 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், மற்றும் 1960-ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகள் ஆகியவை தீவிரமான திருத்தத்தின் போது முதல்முறையாக வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதற்கு உரிய விதிகள் பொருந்தும் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றன. அதன்படியான திருத்தம், ‘வெற்றுப் பட்டியலில்’ (Blank Roll) துவங்கும். அங்கு சேர்த்தல்கள் செய்யப்படும். ஆனால், தற்போதைய சிறப்பு தீவிரத் திருத்தம் ஒரு வெற்றுப் பட்டியலில் தொடங்குவதில்லை. மாறாக, சட்டத்தின் நோக்கத்தையே சீர்குலைக்கும் வகையில், பெயர் களை நீக்குவதற்காகவே வடிவமைக்கப்பட்டதாக தற்போதைய எஸ்.ஐ.ஆர். நடைமுறை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர் வீட்டிலிருந்து வாக்களிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் அமலில் உள்ள நிலை யில், இந்த சிறப்பு தீவிரத் திருத்த செயல்பாட்டில் இந்த இரண்டு பிரிவு வாக்காளர்களும், தங்கள் வசிப்பி டங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள அணுக முடியாத மையங்களில் விசாரணைக்காக அழைக் கப்பட்டுள்ளனர். வாக்களிக்கும் உரிமை நமது ஜனநாயகத்தின் அடிப்படையாகும். அதன் உலகளாவிய மற்றும் சமமான செயல்பாட்டை அச்சுறுத்தும் எந்தவொரு செயல்முறையும் நிறுத்தப்பட்டு மிகுந்த தீவிரத்துடன் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். எனவே, மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, மக்களுக்கு எதிரான போராக மாறி வரும் எஸ்ஐஆர் செயல்முறையைக் கைவிடுமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு எம்.ஏ. பேபி அந்தக் கடிதத்தில் கோரியுள்ளார். (ந.நி.)
