tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு  நிறைவு

சென்னை, ஜன. 19 - தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, 1.75 லட்சம் வாக்குப்பதிவு இயந் திரங்களின் முதற்கட்ட சரி பார்ப்பு பணி நிறைவு பெற்று ள்ளது. இதையடுத்து, 1.10 லட்சம் கட்டுப்பாட்டு அமைப்புகள், 1.16 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

வடகிழக்கு பருவமழை விடை பெற்றது

சென்னை, ஜன. 19- வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவில் இருந்து விலகியதாக இந்திய வானிலை மையம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. தென்னிந்தியாவில் கடந்த அக்டோபர் 16 அன்று வட கிழக்கு பருவமழை தொடங் கியது. இந்த பருவத்தில் டிட்வா புயல் காரணமாக டெல்டா மற்றும் வட மாவட்டங் களில் கனமழை பெய்தால், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையானது வழக்க மாக 44.1 செ.மீ. அள விற்கு இருக்கும். ஆனால், இந்தாண்டு 3 சதவிகிதம் குறைவாக 42.7 செ.மீ.  அளவிற்கே மழை பெய்துள் ளது. சென்னையைப் பொறுத்தவரை 10 சத விகிதம் மழை குறைவாக பதி வாகியுள்ளது.

பாமகவுக்கு உரிமை கோரி ராமதாஸ் வழக்கு

சென்னை, ஜன. 19 - பாமக தலைவர் யார் என்பதில், மருத்துவர் ராம தாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரு கிறது. போலி ஆவணங் களைக் கொடுத்து, பாமக வைக் கைப்பற்ற அன்புமணி முயற்சிப்பதாக ராமதாஸ் குற்றம் சாட்டி வருகிறார். மேலும், தில்லி உயர் நீதி மன்ற வழிகாட்டுதல்படி, ராம தாஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் சிவில் மற்றும் ரிட் வழக்குகள் தாக்கல் செய்துள்ளார்.