tamilnadu

img

சுடுகாட்டுப் பாதையை மீட்டுத் தரக் கோரி வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் சங்கம் மனு

சுடுகாட்டுப் பாதையை மீட்டுத் தரக் கோரி  வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் சங்கம் மனு

திருவள்ளூர், நவ.3- திருவள்ளூர் மாவட்டம், மேலானூர் கிராமத்தில், நீண்ட காலமாகப் பயன் பாட்டில் இருந்த சுடுகாட்டுப் பாதையை தனிநபர் ஒருவர்  மறித்து சுற்றுச்சுவர் எழுப்பி யுள்ளதால், அந்தப் பாதையை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் என்று தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன் னேற்ற சங்கத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி யுள்ளனர். மேலானூர் கிராமத்தில் வேட்டைக்காரன் சமுதாயத் தினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிரந்தரமாக வசித்து வரு கின்றனர். இவர்கள் பயன் படுத்தும் சுடுகாடு அரசுக்குச் சொந்தமான நிலத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சுடு காட்டிற்கு நிரந்தரப் பாதை இல்லாத காரணத்தால், கடந்த காலங்களில் ஒவ்வொரு முறை உடலை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லும்போதும் கடும் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்தன. ‘இந்த வழியே பிணங்களை எடுத்துச் செல்லக் கூடாது’ என்று சிலர் எதிர்ப்புத் தெரிவித் ததால், ஒவ்வொரு முறையும் காவல்துறையினர் வந்து சமாதானம் செய்த பின்னரே உடலைக் கொண்டு செல்ல முடிந்தது. இதுவே வழக்கமாக இருந்தது. இந்தச் சூழலில், வழக்கம் போல் உடல் கொண்டு செல்லப்படும் அந்தப் பாதையை மறித்து தனிநபர் சிலர் சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளனர். இதனால் இனிவரும் காலங்களில் உடல்களை அடக்கம் செய்யப் பாதை இல்லாத மிகவும் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அவசர நிலையைக் கருத்தில் கொண்டு, மேலா னூர் கிராம மக்களுக்குச் சுடு காட்டுப் பாதையை உடனடி யாக அமைத்துத் தர வேண்டும் என்று வலி யுறுத்தி, தமிழ்நாடு வேட்டை க்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் திங்களன்று (நவ 3) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை  எடுப்பதாகத் தெரிவித் துள்ளனர். இந்த மனு அளிக்கும் நிகழ்வில், மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாநிலத் துணைச் செயலாளரும் தமிழரசு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலச் செயலாளருமான இ.கங்காதுரை, மாவட்டத் தலைவர் டி.டில்லி, மாவட்டச் செயலாளர் ராஜா, மாநிலக் குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், கண்ணாயிரம் மற்றும் மேலானூர் கிராம மக்கள் (வேட்டைக்காரன் இன மக்கள் உட்பட) வேலு, செல்வி, வெங்கடேசன், கஜேந்திரன் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.