இறந்தவர் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பு மோசடி! கிருஷ்ணகிரியில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்
கிருஷ்ணகிரி, நவ.3- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தில் நில அபகரிப்பில் ஈடுபடும் நிலத்தரகர்களையும், அவர்களுக்குத் துணைபோகும் கிராம நிர்வாக அலு வலர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் பொய் வழக்குகள் போடும் காவல்துறையினரையும் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திங்களன்று (நவ. 3) ஓசூர் சாராட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. ஓசூர் வட்டத்தில் சென்னை சத்திரம், மாறசந்திரன் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2000 ஏக்கர் பைமாசி நிலங் களில் சாகுபடி செய்து வரும் விவசாயி களுக்குப் பட்டா வழங்கக் கோரி பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுக்கப் பட்டும், 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டும் இது வரை பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில், நிலமற்ற விவசாயி களுக்குப் பட்டா வழங்கக் கோரி கடந்த மே 29, அன்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமை யில் பிரமாண்ட போராட்டம் நடை பெற்றபோதும், அதிகாரிகள் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையில், ஓசூர் வட்டம் ரங்கோ பண்டித அக்ரஹாரம் வருவாய் கிராமத்தில், 1965 ஆம் ஆண்டு உபரி நிலப் பங்கீட்டுச் சட்டத்தின் கீழ் 1997 ஆம் ஆண்டு 15 குடும்பங்களுக்கும் ஒரு மாற்றுத்திறனாளிக்கும் வழங்கப்பட்ட சுமார் 40 ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் முயற்சி நடைபெற்றுள்ளது. சட்டப்படி விற்கவோ வாங்கவோ உரிமையற்ற இந்த நிலத்தை, ஓசூரைச் சேர்ந்த கண்ணன் மற்றும் விஜயகுமார் உள்ளிட்ட சமூக விரோதக் கும்பல்கள், 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து மோசடிப் பதிவு செய்துள்ளன. இந்தக் கும்பல் விவசாயப் பயிர் களை அழித்ததுடன், மின்சாரத் துண்டிப்பு செய்து, ஜே.சி.பி. இயந்திரம் மூலம் பயனாளிகளின் வீடுகளை இடித்துத் தள்ளியுள்ளது. பதிவுத் துறை சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும், வருவாய்த் துறையினர் பட்டா மாற்றம் செய்து கொடுத்திருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் கொடுக்கச் சென்றால், காவல்துறையினர் நிலத்தர கர்களுக்கு ஆதரவாக அவர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டுச் சிறையில் அடைத்துத் துன்புறுத்துவ தாகவும் சங்கத்தினர் குற்றம் சாட்டி னர். குறிப்பாக, ரவியின் முன்னோர்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்து விவசாயம் செய்து, வரி செலுத்தி வரும் நிலத்தை யும் மோசடியாக அபகரிக்க முயற்சிகள் நடக்கின்றன. இதுதொடர்பாக ரவி, முனிராஜ் உள்ளிட்டோர் வழக்குத் தொடுத்தும், நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையிலும் நிலத்தர கர்கள் அரசு அதிகாரிகளின் துணை யுடன் தொடர்ந்து நிலத்தை அபகரிக்கச் செயல்படுவதாகப் புகார் எழுந்துள் ளது. கோரிக்கைகள் ஆளுங்கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டு அப்பாவிகளின் நிலங்களை அபகரித்து வரும் கண்ணன், விஜயகுமார் உள்ளிட்டோர் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.போலியான ஆவணங்கள் தயாரித்து நிலங்களை அபகரிப்பதை உடனடி யாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.நிலத்தில் காலங்காலமாய் விவசாயம் செய்து வரும் ரவி, முனிராஜ் குடும்பத் தினரை அப்புறப்படுத்தும் முயற்சியைத் தடுத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஓசூர் வட்டத் தலைவர் ராஜா ரெட்டி, வட்டச் செயலாளர் முனிராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பி. பெரு மாள், மாவட்டச் செயலாளர் பிரகாஷ், மாவட்டத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதிகாரிகளிடம் உள்ள ஆவணங்களைச் சரிபார்க்க சொல்லியும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக் காததாலும், விவசாயிகளின் காத்தி ருப்புப் போராட்டம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. சாராட்சியரிடம் மனு கொடுத்தபோது ‘ஆய்வு செய்கிறோம்’ என்று மட்டும் கூறிய நிலையில், போராட் டம் நீடிக்கிறது.