சென்னை விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்
சென்னை, நவ.4- சென்னை சர்வதேச விமான நிலை யத்தில் சுங்கத்துறை அதிகாரிகளின் அடுத்தடுத்த சோதனைகளில் ரூ.94.54 லட்சம் மதிப்புடைய 829 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, கடந்த இரண்டு நாட்களாக விமான பயணிகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வந்தனர். திங்களன்று நள்ளிரவு மலேசியா கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த இந்திய ஆண் பயணி ஒருவர் அணிந்திருந்த ஷூ,சாக்ஸில் தங்க பேஸ்ட்டை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 768 கிராம் 24 கேரட் தங்கம் (ரூ.87.54 லட்சம் மதிப்பு) பறிமுதல் செய்யப்பட்டது. செவ்வாயன்று அதி காலை அதே பாதையில் வந்த மற்றொரு விமா னத்தில் வந்த இந்திய ஆண் பயணி ஒருவரிடம் இருந்து 61 கிராம் தங்க பேஸ்ட் (ரூ.6.9 லட்சம் மதிப்பு) பறிமுதல் செய்யப் பட்டது.
