பழவேற்காடு அருகே அரசு மற்றும் கோயில் நிலத்தை மீட்க வலியுறுத்தல்
திருவள்ளூர், நவ. 4- திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகில் உள்ள இடமணி குப்பத்தில் அரசு மற்றும் எல்லையம்மன் கோயி லுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளதை மீட்டெடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இடமணி குப்பத்தில் வசிக்கும் சுப்பிர மணி, ராஜேந்திரன், ரவி, சீனிவாசன், கதிர்வேல், நடராஜன், ராஜேஷ், ஜோதி ஆகி யோர் கொண்ட கும்பல் எல்லையம்மன் கோயிலுக்கும் அரசுக்கும் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். குறிப்பாக, கோயில் குளத்திற்கு மழைநீர் வரும் ஓடை வரவு கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆக்கிரமிப்பு நிலங்களில் வீடு கட்டும் பணி களும் தற்போது நடைபெற்று வருகின்றன. மேற்படி நிலங்களை மீட்டு, யாரும் ஆக்கிரமிப்பு செய்யாதவாறு அரசு சார்பில் எச்சரிக்கைப் பலகை வைக்க வேண்டும் என புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இத னால் ஆக்கிரமிப்பாளர்கள் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படுத்தவும் திட்ட மிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிபிஎம் சார்பில் செப். 11 அன்று பொன்னேரி கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்ற கோட்டாட்சியர், ஆக்கிரமிப்பு அகற்றி எச்சரிக்கைப் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பொன்னேரி வட்டாட்சியரும் இது குறித்து விசாரணை செய்து கடிதம் எழுதியுள்ளார். இருந்தபோதிலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்போதும் அரசு நிலத்தில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருவதாகவும், இதை உடனடி யாகத் தடுக்க வேண்டும் எனவும் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதில் சிபிஎம் மீஞ்சூர் ஒன்றியச் செயலாளர் என்.ரமேஷ்குமார், பகுதிக் குழு உறுப்பினர் டி.நித்தியானந்தம், திரு வள்ளூர் மாவட்ட மீன்பிடித் தொழி லாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஜி.வினாயகமூர்த்தி, உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.கதிர்வேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
