சிதம்பரத்தில் சாரண சாரணியர்களுக்கான ஆளுநர் விருது தேர்வு முகாம்
சிதம்பரம், நவ. 4- சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் சிதம்பரம், வடலூர் சாரண மாவட்ட சாரண சாரணியர்களுக்கான ஆளுநர் விருது தேர்வு முகாம் 3 நாட்கள் நடை பெற்றது. 32 பள்ளிகளைச் சேர்ந்த 137 சாரணர்கள், 69 சாரணியர்கள் மற்றும் 35 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முகாம் நிறைவு விழா வில் சிதம்பரம் மாவட்ட சாரணத் தலைவரும் வீனஸ் குழும பள்ளிகளின் நிறுவனருமான வீனஸ்.எஸ்.குமார் தலைமை தாங்கினார். பள்ளித் தாளாளர் ஏ.ரூபியால் ராணி, முதல்வர் டி.நரேந்திரன், வடலூர் மாவட்ட சாரண ஆணையர் முருகையன், சாரணிய ஆணையர் சுகிர்தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாரணர் மாநிலத் தலைமையகத்தில் நிய மிக்கப்பட்ட முதன்மைத் தேர்வாளர்கள் என்.வேலாயுதம், பி.வீரப்பா, கே.உஷாராணி ஆகியோர் நடுவர்களாக இருந்து ஆளுநர் விருதுகளுக்கான சாரண சாரணியர்களைத் தேர்வு செய்தனர். முகாமில் சாரண உறுதிமொழி, சட்டம், குறிக்கோள், பாடல்கள், முதலுதவి, நிலப்படக்கலை, முடிச்சு கள், கூடாரம் அமைத்தல் போன்ற பாடத்திட்டத்தின் செயல்முறை மற்றும் எழுத்துத் தேர்வுகள் நடை பெற்றன.
