போராட்டத்தால் சிவந்த கோவை மண்: தொழிற்சங்க நாட்குறிப்புத் தொடர்...
கோவையின் செம்மாந்த மண்ணில் வலுவானதொரு இடதுசாரி இயக்கத்தை ஆலமரமாக பரப்பி நிற் கும் கோவை அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் வரலாறு, அடக்கு முறைக்கு எதிராக உதிர்த்து எழுந்த செங்கொடியின் வீரம் செறிந்த கதை! 1967-ல் அண்ணா தலைமையிலான திமுக அரசு, பேருந்து வழித்தடங்களை தேசி யமயமாக்கியபோது, டிவிஎஸ், ராமன் அண்டு ராமக், ஏபிடி போன்ற பெரும் முதலாளிகளின் பேருந்துகள் அரசுடமையாயின. அதன் தொடர்ச்சியாக, 1972 மார்ச் 1 அன்று கோவை, நீலகிரி, ஈரோடு பகுதிகளை உள் ளடக்கி ‘சேரன் போக்குவரத்து கழகம்’ உதய மாகியது. ஏபிடி நிறுவனத்தின் 109 பேருந்து களும், நீலகிரி வட்டாரத்தின் 19 தனியார் முத லாளிகளின் 121 பேருந்துகளும் சேரன் கழ கத்துடன் இணைக்கப்பட்டன. ஆனால், அரசு நிறுவனமாக மாறிய பின்ன ரும், அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம் தனி யார் முதலாளியின் பிடியை விடக் கொடுமை யாகவே இருந்தது. தொழிலாளர்களுக்கு ஷிஃப்ட் முறை கிடையாது; ‘சிலிப்’ முறை தான். அடுத்த தொழிலாளி வண்டி மாற்ற வரும்வரை ஒரு துண்டுச்சீட்டிற்காக காத் திருக்க வேண்டும், அது வரும்வரை வேலையே கதி! தொழிலாளிகள் ஒன்று கூட முடியாது, அதிகாரிகளை எதிர்த்து சத்த மாகக் கூட பேச முடியாது. செருப்பைக் கழற்றிவிட்டுத்தான் அதிகாரியைச் சந்திக்க வேண்டும் என்ற கொடுமை. தனியார் முதலா ளியிடம் கருங்காலி வேலை பார்த்து பழக்கப் பட்டவர்கள் கழகத்திலும் அதே வேலையை செய்தனர். நிர்வாகத்தின் அடியாட்களாகச் செயல்பட்ட இவர்கள், வேலை செய்யாம லேயே சம்பளம் பெற்றனர். பணிமனைக ளில் அட்டூழியம் செய்வது, அப்பாவி தொழி லாளர்களை மிரட்டி பீடி, டீ வாங்கி வரவைப் பது என அராஜகம். தலைவிரித்தாடியது. எதிர்த்தால் ‘டியூட்டி’ கிடையாது, மரத்தடியில் ‘பச்சை பந்தலில்’ காத்திருக்க வேண்டியது தான். இப்படியான அடக்குமுறை 1976 வரை நீடித்தது. 1976 செப்டம்பரில் பொள்ளாச்சி கிளை கேண்டீனில் நிர்வாக இயக்குநர் ஆறுமுகம் தலைமையில் நடந்த கூட்டத்தில், தோழர் ப. காளியப்பன் உட்பட சில தொழிலாளர்கள் இந்த கொடுமைகளை தைரியமாகப் பேசி னர். இது தொழிலாளர்களுக்கு அடக்கு முறையை எதிர்க்கும் துணிவைத்தந்தது. அடுத்து நடந்த ஒரு சம்பவம், சேரன் கழகத்தில் செங்கொடி உருவாக அச்சாரம் போட்டது. 11-ஆம் நம்பர் வழித்தடத்தில் பணி புரிந்த நடத்துநர் சுந்தரம் மீது பொய்வழக்கு எழுதி கையெழுத்துக் கேட்ட செக்கிங் இன்ஸ்பெக்டரை எதிர்த்தபோது, நிர்வாக அடியாளான டிரைவர் பொன்னுசாமி அவரை அடித்தார். இந்த அராஜக சம் பவத்தைக் கேள்விப்பட்டு தோழர்கள் காளி யப்பன், எஸ்.எம். நடராஜன், கே.கே. விஜயன், கே.ஆர். ராமசாமி ஆகியோர் ஒன்று திரண்ட னர். இந்த எழுச்சி, நிர்வாக அடியாட்க ளான கண்ணாமணி, குமாரசாமி போன்ற வர்களின் மீதிருந்த அச்சத்தைப் தொழிலா ளர்களை விட்டு அகற்றத் தொடங்கியது. சங்க வரலாற்றில் 1977 ஆம் வருடம் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. சிஐ டியு சங்கம் வளர்வதைக் கண்டு ஆத்திர மடைந்த நிர்வாக அடியாட்கள் மீண்டும் கைவரிசையை காட்டினர். 1977 அக்டோபர் 5 ஆம் தேதி, முன்னணித் தோழரான நடத்து நர் கே.கே. விஜயனை, சுப்பையா என்ற நிர்வாக அடியாள் வழிமறித்து ரத்தக் காயம் ஏற்படுத்தும் அளவுக்குத் தாக்கினான். இத னால் பொள்ளாச்சி பணிமனையில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பா. காளியப்பன், ஏ.எஸ். கிருஷ்ணமூர்த்தி, கே.ஆர். ராமசாமி உள்ளிட்ட முன்னணித் தோழர்களின் தலை மையில் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு பணிமனையில் பணிநிறுத்தம் செய்தனர். பெரும் போராட்டத்துக்குப் பிறகு காவல் துறையைத் தூண்டிவிட்டு நிர்வாகம் தோழர் களை கைது செய்ய வைத்தது. பொள்ளாச்சி கிளைச்சிறையில் அடைக் கப்பட்ட தோழர்களை தொழிலாளர்கள் திர ளாக சென்று சந்தித்தனர். மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் பி.ஏ. சலீம் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயத் தொழிலா ளர்களும், தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜாமீனில் வெளிவந்த தோழர்கள் காளியப்பன் உள்ளிட்டோர், பொள்ளாச்சி நகர வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, பணிமனை வாசலில் வெற்றிவிழாக் கூட்டத்தை நடத்தினர். இதே வேளையில், மேட்டுப்பாளையம் சாலை தலைமையகத்தை தோழர்கள் நஞ்சப்பன், டி. பாலன் தலைமையில் ஆயிரக்கணக்கான சிஐடியு தோழர்கள் முற்றுகையிட்டு போரா டினர். இத்தகைய போராட்டங்கள், சேரன் கழகத் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற் சங்கத்தின் மீது பெரும் நம்பிக்கையை விதைத்தன. போண்டா சங்கம் வீழ்ந்தது - செங்கொடி வென்றது சங்கம் வளர்வதை கண்டு அஞ்சிய நிர் வாகம், அதனை ஒழித்துக் கட்டும் நோக் கில் தோழர்கள் ப. காளியப்பன், எஸ்.எம். நடராஜன், கே.ஆர். ராமசாமி உள்ளிட்ட 16 முன்னணித் தோழர்களை டிஸ்மிஸ் செய்தது. இந்த அடக்குமுறையை எதிர்கொள்ள, நிர் வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, நிர்வாக அடியாட்களே உறுப்பினர்களாக இருந்த ‘போண்டா சங்கம்’ (13 CBE பதிவு எண்) என்று கேலி செய்யப்பட்ட சங்கத்தை கைப் பற்ற நமது தோழர்கள் முடிவெடுத்தனர். ஏனென்றால், அதன் கூட்டங்களில் அனை வருக்கும் ‘போண்டா, டீ’ வழங்கப்பட்டு, நிர் வாகம் விரும்பும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டதால் அதற்கு அந்தப் பெயர் வந் தது. சங்கத் தேர்தல் நடத்தக்கோரி உடு மலைப்பேட்டை கிளையின் நடத்துநர் விஸ்வ நாதன் உட்பட நமது தோழர்கள் குரல் கொடுத்தனர். ஒருநாள் அதிகாலை பணிக்கு வந்த விஸ்வநாதன் மீது நிர்வாக அடி யாட்கள் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்து எரிக்கும் அளவுக்கு அராஜகத்தில் ஈடுபட்ட னர். இந்தப் பிரச்சனை சட்டமன்றம் வரை எதிரொலித்த நிலையில், நிர்வாகம் சங்கத் தேர்தலை நடத்த ஒப்புக்கொண்டது. நமது தோழர்கள் சந்திரமோகன் (செய லாளர்), நாராயணன் (தலைவர்), திருப் பூர் ராமசாமி (பொருளாளர்) ஆகியோர் தலைமையிலான அணி, தொழிலாளர்க ளின் அமோக ஆதரவுடன் பெரும் வெற்றி பெற்றது! இதன்மூலம் போண்டா சங்கம், உண்மையான தொழிலாளர் சங்கமாக நமது வசமானது. இந்த வெற்றி, தொழிலாளர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. சிஐடியு அமைப்பு வெளிப்படையாக செயல்படத் தொடங்கியது, நமது தோழர் கள் தங்களைக் ‘கம்யூனிஸ்ட்டுகள்’ என்று பிர கடனப்படுத்தி கொண்டனர். தியாகத்தின் பலன்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ப. காளியப்பன் உள்ளிட்ட 16 தோழர்களின் தியாகம் வீண் போகவில்லை. சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோழர் கே. ரமணி அவர்கள் இது குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் எம். ஜி.ஆரின் கவனத்திற்கு கொண்டு சென்ற தால், அனைவருக்கும் மீண்டும் பணி கிடைத் தது. ஆனால் வேறு வேறு கழகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். தருமபுரிக்கு அனுப்பட்ட ப.காளியப்பன் தனது வேலையை ராஜினமா செய்துவிட்டு முழு நேர ஊழிய ராக சங்க பணியாற்றி வந்தார். இப்படி பல நூற்றுக்கணக்கான தோழர்களின் தியாகத்தாலும், போர்க்குணம் மிக்க முயற்சி யாலும், அடக்கு முறைக்கு எதிராக செங் கொடி பட்டொளி வீசிப் பறந்தது. அனைவருக்குமான ‘வண்டி போஸ்டிங்’, தொழில் நுட்பப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை, கேண்டீன் தொழிலாளர்கள் பணி நிரந்தரம், அத்துக்கூலிகளுக்கு பணி நிரந்தரம், தற்காலிகப் பணியாளர்களில் 200 பேருக்கு நிரந்தர வேலை என மகத்தான பல சாதனைகளைச் சங்கம் செய்தது. ஆளும் கட்சியினர் பணி செய்யாமல் சுற்றித் திரியும் ‘ஓடி முறைக்கு’ எதிராக வழக்கு தொடுத்து அதிகார வர்க்கத்தை எதிர்த்து நின்றது. தோழர்கள் கே. ரமணி, நஞ்சப்பன், பி.ஏ. சலீம், கே.சி. கருணாகரன் போன்ற தலை வர்களால் வழிநடத்தப்பட்டு, இன்றும் எஸ். எம். நடராஜன், அருணகிரிநாதன், ப. காளி யப்பன் போன்றோர் வழிகாட்டும் செங்கொடி இயக்கம், சமீபத்தில் நடத்திய 62 நாள் காத்திருப்புப் போராட்டத்தின் மூலம் தன்னை முன்னிலும் பிரம்மாண்டமான அமைப்பாக வெளிப்படுத்தியுள்ளது. வால்பாறை தேயிலை தொழிலாளர்க ளுக்கு சங்கம் கட்டிடம் கட்டித் தந்தது, ஆனைமலை மலைவாழ் மக்களுக்கு நிதி உதவி தந்தது, பாரம்பரியமிக்க பார்க்கேட் அலுவலகத்தில் மாணவர், வாலிபர், மாதர் சங்கங்களுக்கு அலுவலக இடம் கொடுத்தது என, இதன் அர்ப்பணிப்பு விரிவானது. கோவையில் நடைபெறும் சிஐடியுவின் 16- ஆவது மாநில மாநாட்டை ஆகப் பெரும் வெற்றியடையச் செய்ய அரசு போக்கு வரத்துக் கழகத் தொழிலாளர்கள் முன்னிற் பார்கள் என்பது திண்ணம்.
