tamilnadu

img

திட்டக்குடி மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி  மருத்துவமனையில் அடிப்படை  வசதிகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர், நவ. 4- திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, மங்களூர் கடை வீதியில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டப் பொருளாளர் சிவசூரியன் தலை மையில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், எஸ்.பிரகாஷ், ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் வீராசாமி, விவசாய சங்கத் தலைவர் சாமிதுரை, பெரியசாமி, மகாலட்சுமி, சந்திரன், ராஜேந்திரன், நாராயணசாமி, ஆசைத்தம்பி, செல்லதுரை, சுகுமாரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் மருத்துவ அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அனைத்து மருந்து மாத்திரைகளும் மருத்துவமனையில் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும்,  மருத்துவர்கள், செவி லியர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,  24 மணி நேரமும் மருத்துவர்கள் தங்கிப் பணியாற்ற வேண்டும்,  நாய்க்கடி மருந்து உள்ளிட்ட விஷமுறிவு மருந்துகளை எப்போதும் கைஇருப்பில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.