ராணிப்பேட்டை மாவட்டத்தில் முடிவுற்ற பணிகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
ராணிப்பேட்டை, நவ.3 துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராணிப்பேட்டை மாவட்டத் தில் திங்களன்று (நவ.3) ரூ.43.74  கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 115 திட்டப் பணி களை திறந்து வைத்தார்.   ரூ.24.34  கோடி மதிப் பீட்டிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு  அரசு துறைகளின் சார்பில் 72,880  பயனாளிகளுக்கு ரூ.296.46 கோடி மதிப்பீட்டிலான  அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில்  பொதுப் பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.43.74 கோடி மதிப்பீட்டில் முடி வுற்ற 115 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் ஆகியவற்றின் சார்பில் மொத்தம் ரூ. 24.34 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள  6 புதிய  திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 72,880  பயனாளிகளுக்கு ரூ.296.46 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி னார். ஊரக வளர்ச்சித் துறை யின் சார்பில் ஆற்காடு, திமிரி, வாலாஜா, அரக் கோணம், காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலகம், தானிய சேமிப்பு கிடங்கு, பால் கொள்முதல் நிலை யம், பொது நூலகம், இருப்பிட கட்டடம், பள்ளி வகுப்பறை கட்டடம், உடற் பயிற்சி கூடம், பேருந்து நிழற்கூடம் என மொத்தம் ரூ. 22.90 கோடி மதிப் பீட்டில் 92 முடிவுற்ற திட்டப் பணிகளையும் திறந்து வைத்தார்.    பொதுப்பணித் துறை சார்பில் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் புலிவலம்,  காவேரிப்பாக்கம், நெமிலி ஊராட்சி ஒன்றியம் மேல்க ளத்தூர், அம்மூர் மற்றும் கலவை ஆகிய இடங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி களில்  ரூ. 9.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 39 வகுப்பறை கட்டடங் களையும்,  நகராட்சி நிர்வா கம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ஆற் காடு, ராணிப்பேட்டை, வாலாஜாப்பேட்டை, மேல் விஷாரம், அரக்கோணம் ஆகிய நகராட்சிகளில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு குழாய் மற்றும் பம்பு அமைக்கும் பணிகள், சமுதாய கழிப்பி டம், பசுமை பூங்கா, பள்ளி வகுப்பறை, பல்நோக்கு கட்டடம், அங்கன்வாடி மையம்,  பெருந்தலைவர் காமராஜர் நினைவகம் புனரமைப்பு பணிகள் என 11.19 கோடி ரூபாய் மதிப்பீ ட்டிலான 18 திட்டப் பணி கள் என மொத்தம் 43.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 115 திட்டப் பணி களை திறந்து வைத்தார். இதே நிகழ்ச்சியில பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 72,880 பயனாளிகளுக்கு, 296.46 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான  நலத்திட்ட உதவிகளையும் துணை முதல்வர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட் சகன், சட்டமன்ற உறுப்பி னர்கள் ஜெ.எல்.ஈஸ்வரப் பன், ஏ.எம்.முனிரத்தினம், மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா, வருவாய் அலுவலர் செ.தனலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
                                    