புழுதிவாக்கம் தொடக்கப்பள்ளி 5ஆம் வகுப்பு மாணவியை தலைமை ஆசிரியை இந்திரா காந்தி கடுமையாக தாக்கிய சம்பவத்தில், அவர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் விரைந்து வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி திங்களன்று (நவ.3) தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் தலைவர் தமிழ்வாணன், துணைத் தலைவர் இமயம் ஆகியோரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.பிரமிளா, நிர்வாகிகள் எஸ்.வாலண்டினா, கோட்டீஸ்வரி ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர்.
