tamilnadu

img

இரைப்பை மற்றும் கல்லீரல் நவீன சிகிச்சை மையம்  பிரைம் மருத்துவமனையில் துவக்கம்

இரைப்பை மற்றும் கல்லீரல் நவீன சிகிச்சை மையம்  பிரைம் மருத்துவமனையில் துவக்கம்

சென்னை,நவ.3- எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையானது, தென்னிந்தியாவின் மேம்பட்ட எண்டோஸ்கோபிக் பிரிவுடன் கூடிய இரைப்பை - குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சை மையத்தை சென்னை ராமாபுரத்தில் உள்ள மருத்துவ மனை வளாகத்தில் தொடங்கியுள்ளது.  அனைத்து வயதினருக்கும் விரிவான மற்றும் துல்லிய மான மருத்துவ சேவைகளை வழங்கும் வகையிலான சிறப்பு கட்டமைப்பு இங்கு உள்ளது. அதனை தமிழ் திரைப்பட  இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன் , மருத்துவ மனையின் தலைமை நிர்வாக அதிகாரி பி. சிவா, இரைப்பை - குடல் மற்றும் கல்லீரல் நலத்துறை தலைவரும், முதுநிலை மருத்துவ நிபுணருமான டாக்டர் அருள்பிரகாஷ், இரைப்பை - குடல் மற்றும் கல்லீரல் நலத் துறை முது நிலை மருத்துவ நிபுணர் டாக்டர் தருண் ஜெ. ஜார்ஜ் ஆகி யோர் திறந்து வைத்தனர்.  ஜீரண மண்டலத் துறையில் தேர்ந்த அனுபவமும், நிபுணத்துவமும் கொண்ட மருத்துவ வல்லுநர்கள் இந்த மையத்தில் சேவையாற்றுகின்றனர். இந்த மையத்தில் இரைப்பை - குடல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு மிகத் துல்லியமான வழிகாட்டுதலுடன் கூடிய, சிறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இயலும் என்று மருத்துவ மனை செய்திக்குறிப்புதெரிவிக்கிறது.