ஏரி, கால்வாய் சாலையோர குடும்பங்களுக்கு மாற்றி இடம் வழங்க ஆலோசனை
சென்னை, நவ.3 சென்னைப் பெருநகர் பகுதியிலுள்ள ஏரி, கால்வாய் மற்றும் சாலை ஓரங்களில் குடி யிருக்கும் குடும்பங்களுக்கு மாற்றி இடம் வழங்குவது தொடர்பாக உயர் அலுவலர் களுடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் திங்களன்று (நவ.3) நடை பெற்றது. முதலமைச்சர் உத்தரவின்படி சென்னை, எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் அலுவலகத்தில் அமைச்ச ரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக்குழு மத் தலைவருமான பி.கே.சேகர்பாபு தலை மையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேயர் ஆர்.பிரியா, கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லாஉஷா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர்கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.
போலி விசா தயாரித்தவர் கைது
அம்பத்தூர், நவ. 3- புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம். கரம்பன்காடு ஜமீன் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (26). இவர் வெளிநாடு செல்வதற்கான முயற்சியில் ஈடு பட்டுள்ளார். அப்போது ஆகாஷிற்கு ஆவடி பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வந்த சேரலாதன் என்பவரது அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆகாஷ் துபாய் செல்வதற்கு அவரிட மிருந்து ரூ.1.30 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு சேரலாதன் கடந்த ஜூலை மாதம் இ- விசா மற்றும் பயணச் சீட்டை வாட்ஆப் மூலம் அனுப்பியுள்ளார். ஆகாஷ் அவற்றை எடுத்து கொண்டு துபாய் செல்ல முயன்றபோது அந்த விசா போலியானது எனக் கூறி சென்னை விமான நிலைய அதிகாரிகள் திருப்பியனுப்பினர். இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் சேரலாதன் கைது செய்யப்பட்டார்.