பண்ருட்டி அருகே அஞ்சனக்கோல் கண்டெடுப்பு
கடலூர்,நவ.3- கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு, எனதிரி மங்கலம், தளவானூர் ஆகிய கிரா மங்களின் தென்பெண்ணை ஆற்றங் கரையில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்கொண்ட கள ஆய்வில் பழங்கால மக்களின் வாழ்வி யலை வெளிப்படுத்தும் முக்கிய மான தொல்பொருட்கள் கண்டெடுக் கப்பட்டுள்ளன. பெண்கள் கண்களுக்கு மை தீட்டு வதற்குப் பயன்படுத்திய செம்பினால் ஆன அஞ்சனக்கோல் 12 செ.மீ நீளமும் 8.22 கிராம் எடையும் கொண்டதாக கிடைத்துள்ளது. இதுபோன்ற அஞ்சனக்கோல்கள் மருங்கூர், வெம்பக்கோட்டை போன்ற இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டுள்ள துடன், தற்போதைய 9-ம் வகுப்பு சமச்சீர் கல்வி சமூக அறிவியல் பாட நூலில் இது பற்றிய பாடமும் இடம் பெற்றுள்ளது. இதனுடன் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஓய்வு நேரங்களில் விளையாடிய சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகளும் பல்வேறு அளவுகளில் கண்டெடுக்கப்பட்டுள் ளன. இவை தற்போது பாண்டி விளை யாட்டு என அழைக்கப்படும் பாரம்பரிய விளையாட்டில் பயன்படுத்தப்பட்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன. கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த அகழ்வாய்வுக ளிலும் இதுபோன்ற வட்டச்சில்லுகள் கிடைத்துள்ளன.
                                    