tamilnadu

img

மூத்த பத்திரிகையாளர் இரா.தணிகை தம்பி காலமானார்

மூத்த பத்திரிகையாளர்  இரா.தணிகை தம்பி காலமானார்

புதுச்சேரி, மே 2 - சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முது கலை பட்டம் பெற்ற தணிகை தம்பி (76), கல்லூரி பருவத்தில் தமது எழுத்தாற்றல் ஆர்வத் தால் சமூகத்தில் நடைபெற்ற பல்வேறு பொது பிரச்சனை களுக்கு தீர்வு கண்டவர். தினசரி நாளிதழ், வார பத்தி ரிகை உள்ளிட்ட தொலைக் காட்சி செய்தி பிரிவுகளில் திறம்பட பணியாற்றியவர். புதுச்சேரி மாநிலத்தின் மூத்த பத்திரிகை யாளராக திகழ்ந்த தணிகை தம்பி, தனது  வீட்டில் நடை பயிற்சியின் போது தவறி கீழே  விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். புதுச்சேரி ஜவஹர் நகரில் வைக்கப் பட்டிருந்த அன்னாரது உடலுக்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, அரசியல் கட்சித் தலை வர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பி னர்கள், பத்திரிகையாளர்கள் நேரில் சென்று  அஞ்சலி செலுத்தினர். சிபிஎம் இரங்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செய லாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மூத்த செய்தியாளராக தனித் தன்மையுடன் திகழ்ந்து வந்த தணிகை தம்பியின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சங்க குடும்பத்தில் பிறந்த  அவர், சிதம்பரத்தை பூர்வீக மாக கொண்டவர். தணிகை தம்பியின் சகோதரர் சண்முகம் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக திகழ்ந்த வர். தணிகை தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது” என கூறப்பட்டுள்ளது. அகில இந்திய சமாதான ஒருமைப் பாட்டுக் கழகம் மற்றும் சென்னை பத்திரி கையாளர் மன்றம் சங்கமும் இரங்கல் தெரிவித்திருக்கிறது.