நாட்டிற்கே நுழைவாயிலானது விழிஞ்ஞம்! துறைமுகத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி - முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்பு
திருவனந்தபுரம், மே 2 - அரசு - தனியார் பங்களிப்பில், ரூ. 8,867 கோடி செலவில் கட்டப் பட்டுள்ள விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் பன்னோக்குத் துறை முகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரளத் தலைநகர் திரு வனந்தபுரத்தில் வெள்ளியன்று நடை பெற்ற இதற்கான விழாவில், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஒன்றிய -மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர். விழிஞ்ஞம் துறைமுகமானது, இந்தியாவின் முதல் ஆழ்கடல் பன் னோக்குத் துறைமுகம் (Vizhinjam International Deep water Multipurpose Seaport)ஆகும். பெரிய சரக்குக் கப்பல்கள் வந்து செல்லும் அளவிற்கு ஆழ மான துறைமுகங்கள் இந்தியாவில் இல்லை என்ற நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புக்குச் சென்று, அங்கு சரக்குகள் சிறிய கண்டெய் னர் கப்பல்களுக்கு மாற்றப்பட்டு, இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப் படும் நிலை தான், இதுவரை உள்ளது. தற்போது, விழிஞ்ஞம் துறை முகத்தின் மூலம் பெரிய சர்வதேச கப்பல்கள் நேரடியாகவே இந்தியா வரும் நிலை உருவாகியுள்ளது. சர்வதேச கப்பல் பாதைக்கு மிக அருகே 10 நாடிக்கல் மைல் தொலைவில் விழிஞ்ஞம் துறை முகம் அமைந்துள்ளது. இதன் ஆழம் 20 மீட்டருக்கு மேல் இருப்பதால் மிகப் பெரிய கண்டெய்னர் கப்பல் களையும் எளிதாகக் கையாள முடி யும். 20 மீட்டருக்கும் அதிகமான ஆழம் தேவைப்பட்ட கப்பல்கள் இவ்வளவு காலமும் கொழும்பு, துபாய் மற்றும் சிங்கப்பூரில் நிறுத்த ப்பட்ட நிலையில், அவற்றை இனி விழிஞ்ஞத்திலேயே நிறுத்த முடியும். இதனால் இறக்குமதி செலவுகள் கணிசமாக குறையும் என்பதுடன், விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு வரு வாயும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விழிஞ்ஞம் துறைமுகத்தில் கடந்த சில மாதங்களாகவே சோத னை முறையில் கப்பல்கள் நிறுத்தப் பட்டு வந்தன. 250க்கும் மேற்பட்ட கண் டெய்னர் கப்பல்கள் நிறுத்தப்பட்ட போதிலும் அவற்றைக் கையாள்வ தில் எந்தவொரு சிக்கலும் ஏற்பட வில்லை. இதையடுத்தே, விழிஞ்ஞம் துறைமுகத்தை அதிகாரப்பூர்வமாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளியன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் பினராயி விஜயன், ஒன்றிய அமைச்சர்கள் சர்பானந்த சோனோவால், சுரேஷ் கோபி, ஜார்ஜ் குரியன், கேரள அமைச்சர்கள் வி.என்.வாசவன், ஜி.ஆர்.அனில், சாஜி செரியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.ஏ.ரஹீம், ஜான் பிரிட்டாஸ், சசிதரூர், மேயர் ஆர்யா ராஜேந்திரன், தொழிலதிபர்கள் கவுதம் அதானி, கரண் அதானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முடியாததை சாத்தியமாக்கிய கேரள அரசு மாநில அரசின் முயற்சியில் அமைந்த மாபெரும் துறைமுகம் முதலமைச்சர் பினராயி விஜயன் பெருமிதம்
விழிஞ்ஞம் துறைமுகத் திறப்பு விழாவில், முதலமைச்சர் பினராயி விஜயன் உரையாற்றினார். அப்போது, “கேரளத்தின் மிகப் பெரிய கனவுகளில் ஒன்று விழிஞ்ஞத்தில் நனவாகியுள் ளது. இது நாட்டிற்கே பெருமை சேர்க்கும் தருணம். இது ஒரு துறைமுக நுழைவு வாயிலைத் திறப்பது மட்டுமல்ல, மூன்றாம் மில்லினியத்தின் வளர்ச்சித் திறனுக்கான நாட்டின் பிரம்மாண்ட நுழைவுவாயிலையும் திறப்பதாகும்” என்று பினராயி விஜயன் பெருமிதம் தெரிவித்தார். “கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் விருப்பமும் உறுதியும் தான் கேரளத்தை ஒரு சர்வதேச துறைமு கமாக மாற்றியது. இந்தியா இனி உலக கடல்சார் வரைபடத்தில் தடம் பதிக்கும் என்பதில் ஒவ்வொரு மலையாளியும் பெருமைப்படலாம்” என்றும் குறிப்பிட்டார். “வெள்ளம் மற்றும் கோவிட் தொற்று நோய் உட்பட பல நெருக்கடிகள் வந்தன. அவை எதன் முன்பும் நாம் சோர்ந்து போகவில்லை. இன்று நாட்டி லேயே ஒரு மாநில அரசின் முதலீடுகளை அதிகமாகக் கொண்ட சர்வதேச துறை முகத்தை விழிஞ்ஞத்தில் அமைத்து சாதனை படைத் துள்ளோம். இந்தியாவில் ஒரு மாநில அரசின் முன் முயற்சியில் ஒரு பெரிய துறை முகம் கட்டப்பட்டுள்ளது இதுவே முதல்முறை” என்றார். மேலும், “மொத்த திட்டச் செலவில் மூன் றில் இரண்டு பங்கை கேரள அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. துறைமுக கட்டு மானத்தில் எந்த இடையூறும் இன்றி அனைத்து பொறுப்புகளையும் துல்லிய மாக நிறைவேற்றியுள்ளது. இதன் கார ணமாக, ஒப்பந்தப்படி 2045-இல் மட்டுமே முடிக்கப்பட வேண்டிய திட்டம், 2028-இல் முன்கூட்டியே முடியும் நிலையில் உள் ளது. இதுவரை 270-க்கும் மேற்பட்ட கப்பல்கள் விழிஞ்ஞத்தில் நங்கூர மிட்டுள்ளன. முடியாது என்று நினைத்த தை எல்லாம், 9 ஆண்டுகளில் இடது ஜன நாயக முன்னணி அரசு சாத்தியமாக்கி இருக்கிறது. புதிய வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்ற பாதைகளில் கேரளம் முன்னேறிச் செல்கிறது” என்றும் பினராயி விஜயன் குறிப்பிட்டார்.