states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்து 10 நாட்களுக்கு மேலாகி விட்டது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகளின் தூக்கத்தை குலைப்பது பற்றி பிரதமர் பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியும் ஒருவர் இருக்க முடியுமா?

வினயின் (பஹல்காமில் உயிரிழந்தவர்) மனைவி ஹிமான்ஷி

எந்தவொரு சமூகத்தின் மீதும் கோபத்தைத் திருப்பக்கூடாது. முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளுக்கு எதிராக மக்கள் திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும். அமைதி மட்டுமே வேண்டும். அதேபோல எனது கணவரின் மரணத்திற்கு நீதி வேண்டும்.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ்

சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு என்பது பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வெற்றி. இந்தியா கூட்டணி மற்றும் உழைக்கும் மக்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது. வேறு வழியில்லாமல், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஒன்றிய பாஜக அரசு.

விபிஏ பொதுச்செயலாளர் பிரகாஷ் அம்பேத்கர்

இந்திய ராணுவ அதிகாரிகள் பஹல்காம் தாக்குதலுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை  எடுக்கவும் அரசாங்கத்தின் வழிகாட்டுதலுக்காக காத்திருக்கின்றனர். ஆனால் மத்தியில் ஆளும் கட்சி வலிமை வாய்ந்ததல்ல. அதனால் தான் நடவடிக்கை எடுப்பது குறித்து காலதாமதம் ஏற்படுகிறது.