கியூபா, இலங்கை நாடுகளில் மே தின எழுச்சி
உலகத் தொழிலாளர்களின் உரிமை திருநாளான மே தினம் வியாழனன்று உலகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதில் கியூபா தலைநகர் ஹவானாவிலும், இலங்கை தலைநகர் கொழும்புவிலும் பல லட்சம் பேர் திரண்ட பிரம்மாண்ட பேரணிகள் பெரும் எழுச்சியை ஏற்படுத்தின.