3, 5, 8-ஆம் வகுப்பு குழந்தைகளையும் பெயில் ஆக்க மோடி அரசு உத்தரவு!
சிபிஎஸ்இ பள்ளிகளில் அமலுக்கு வந்த புதிய நடைமுறை
சென்னை, மே 2 - தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி 3,5,8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வை அறிவித்த மோடி அரசு, தற்போது, இந்த வகுப்புகளில் 30 சதவிகிதத்திற்கும் குறைவான மதிப் பெண் எடுக்கும் குழந்தைகளை, 2025-26 கல்வியாண்டு முதல் ‘பெயில்’ ஆக்குவதை நடைமுறைப் படுத்தியுள்ளது. “தங்களின் குழந்தை குறைவான மதிப்பெண் எடுத்தால் ‘பெயில்’ ஆக்க சம்மதிக்கிறோம்” என்று பெற் றோர்களிடமே சிபிஎஸ்இ பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் படி, 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி இருந்த நிலையில், மோடி அரசு திடீ ரென மே 1 முதல், பெயில் ஆக்கும் நடைமுறையை கொண்டுவந்துள்ளது. இந்த புதிய நடைமுறை பெற் றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ள நிலையில், இது சரியான நடைமுறை அல்ல; பெயில் ஆக்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர்.
“பெற்றோர்கள் கையெழுத்து போடாதீர்கள்; எதிர்த்துக் குரல் கொடுங்கள்!”
சிபிஎஸ்இ பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற விதி ரத்து செய்யப் பட்டதற்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடும் கண்ட னம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “சிபிஎஸ்இ கல்வி திட்டத்தில் மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர் வில் தோல்வியடைந்தால், அவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண் டும் என்ற நடைமுறையை அமல்படுத்தி உள்ளார்கள். இது அந்த மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் மிகப் பெரிய அழுத்தத்தை ஏற் படுத்தும். சிறு வயதில் அந்த குழந்தைகள் அந்த அழுத்தத் தை எப்படி தாங்கிக் கொள்வார் கள். மூன்றாம் வகுப்பிலேயே ஒரு மாண வனை தோல்வி அடைய செய்தால், பள்ளி இடை நிற்றல் அதிகரிக்கும். எனவே, தேசிய கல்விக் கொள்கை யின் மூலமாக மாணவர்களின் எதிர் காலத்தோடு மோடி அரசு விளையாடும் போது பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இந்த நடைமுறை யை எதிர்த்து பெற்றோர்கள் கேள்வி கேட்க வேண்டும். சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகளுக்கு ஆல் பாஸ் கிடையாது என கையெழுத்து போட சொன்னால், எதிலும் கையெழுத்து போடாமல் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்.