tamilnadu

img

லோகோ பைலட்டுகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுக!

லோகோ பைலட்டுகளின்  கோரிக்கைகளை நிறைவேற்றுக!

திருச்சியில் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 2-  அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர்கள் கழகம் சார்பில், கோரிக்கை களை வலியுறுத்தி, வியாழனன்று திருச்சி ஜங்ஷனில் உள்ள தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லோகோ பைலட்டுகளின் நீண்ட நாள் கோரிக்கையான அனைத்து லோகோ கேபினில் குளிர்சாதன வசதி செய்து தர வேண்டும். அனைத்து லோகோக்களிலும் நவீன கேப் சிக்னலிங், கழிவறை வசதி, டூல்ஸ் பாக்ஸ் மற்றும் எப்.எஸ்.டி பொருத்த  வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க முன்னாள் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.  கோரிக்கைகளை விளக்கி டி.ஆர்.இ.யூ முன்னாள் உதவி பொதுச்செயலாளர் மண்ணை மனோகரன், கோட்டச் செயலாளர் கரிகாலன், உதவி பொதுச் செயலாளர்கள் சரவணன், ராஜா, உதவி கோட்டச் செயலாளர் ரஜினி ஆகியோர் பேசினர். அகில இந்திய லோகோ ஒடும் தொழிலாளர்கள் கழகம் கோட்ட செயலாளர் கண்ணையன் நன்றி கூறினார்.