டெல்டா மாவட்டங்களில் செங்கொடி ஏற்றி மே தின கொண்டாட்டம்
கும்பகோணம், மே 2- உழைப்பாளி மக்களின் ஒப்பற்ற திருவிழாவான 139 ஆவது மே தினம், டெல்டா மாவட்டங்களில் செங்கோடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கும்பகோணம் நகரச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், சிஐடியு மாவட்டத் தலைவர் கண்ணன், சாலைப்போக்குவரத்து சம்மேளன மாநிலப் பொருளாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட சிபிஎம், சிஐடியு ஆட்டோ தோழர்கள் 79 இடங்களில் செங்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர். மாலை கும்பகோணம் மகாமகக் குளக்கரையிலிருந்து அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன் தலைமை யில் ஓய்வூதியர்கள் மற்றும் சிஐடியு தொழிலாளர்கள் பேரணியாக வந்து காந்தி பூங்கா அருகில் மே தின பொது கூட்டம் நடைபெற்றது கும்பகோணம் ஒன்றியத்தில், சுமார் 24 இடங்களில் நடந்த நிகழ்ச்சி யில் ஒன்றியச் செயலாளர் கணேசன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவிடைமருதூர் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றி யத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் பழனிவேல் தலைமையில், சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் உட்பட சிஐடியு ஆட்டோ தொழிலா ளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு 34 இடங்களில் செங்கொடி யேற்றி இசை முழக்கத்துடன் இனிப்பு வழங்கி கொண்டாடினர். தோழர் பி. ராமமூர்த்தி நினைவகம். கட்சி அலுவலகம் உட்பட ஏழு இடங்களில் செங்கொடி ஏற்றியும், மாலை திருபுவனம் கடைவீதியில் ஒன்றியச் செயலாளர் சங்கர் தலை மையில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பி னர் அரவிந்த்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் ஜீவபாரதி சேகர் உள்ளிட் டோர் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மே-தின ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் இணைந்து வியாழனன்று திருச்சி மாநகர் மரக்கடை பகுதியில் நடத்தின. கூட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன், ஏ.ஐ.டி.யு.சி மாவட்டத் தலைவர் நடராஜா ஆகி யோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்டப் பொருளாளர் மணிகண்டன் வரவேற்புரை ஆற்றினார். சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பாலபாரதி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாநிலக்குழு உறுப்பினர் செல்வி, ஏ.ஐ.டி.யு.சி நடராஜன், மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் ராமராஜ் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக, பாலக்கரை ரவுண்டானா அருகிலிருந்து துவங்கிய பேரணி, மரக்கடை பகுதியில் பொதுக்கூட்ட மேடை அருகே நிறை வடைந்தது. ஏஐடியுசி தரைக்கடை சங்கச் செயலாளர் அன்சர்தீன் நன்றி கூறினார். பாபநாசம் பாபநாசம் அருகே, அம்மாப் பேட்டை ஒன்றியத்தில் மே தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலூர், மேலமாகாணம், எம்.ஜி.ஆர் நகர், நெல்லித் தோப்பு, மெலட்டூர், ஒன்பத்துவேலி, அக்கரைபடுகை உள்ளிட்ட பகுதி களில் 27 இடங்களில் கட்சி கொடியும், 2 இடங்களில் வி.தொ.ச கொடியும், 1 இடத்தில் வாலிபர் சங்கக் கொடியும் ஏற்றப்பட்டன. அம்மாப்பேட்டை நகரத்தில் கொடி ஏற்றப்பட்டு மே தின தெருமுனை கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மனோகரன் சிறப்புரை யாற்றினார். ஒன்றியச் செயலாளர் ரவி, மாவட்டக் குழு உறுப்பினர் நம்பி ராஜன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் முனியாண்டி, மயில்வாகனன், சேகர், சரவணன், ராஜேந்திரன், வெற்றிச்செல்வி உட்பட, திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். பெரம்பலூர் பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மே தின விழாவையொட்டி, ரோவர் வளைவு பகுதியில் மே தின பேரணி நடை பெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பாலக்கரை வழியாக சென்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நிறை வடைந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லதுரை, ராஜேந்திரன், கலையரசி, சிஐடியு மாவட்டத் தலைவர் ரெங்கநாதன், மாவட்டத் துணைத் தலைவர் கருணாநிதி, மாவட்ட துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தென் மண்டல முன்னாள் பொதுச்செயலாளர் சுவாமிநாதன் கலந்துகொண்டு மே தின சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார். கூட்டத்தில் கட்சி பொறுப்பா ளர்கள், நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர்கள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். திருவாரூர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம், பேரளத்தில் சிபிஎம்-சிஐடியு சார்பாக மே தின பேரணி எழுச்சியாக நடைபெற்றது. பேரளம் குட்செட் அருகே நடைபெற்ற பேரணிக்கு பேரளம் ரயில்வே குட்செட் செயலாளர் ஜெ. மனோகரன் தலைமை வகித்தார். சுமைப்பணி மாவட்டத் தலைவர் டி. வீரபாண்டியன் பேரணியை துவக்கி வைத்தார். முன்னதாக, மே தினத்தை முன்னிட்டு கட்சிக்கொடி, சிஐடியு, சுமைப்பணி மற்றும் மாதர், வாலிபர் சங்கங்ளின் கொடிகளை அமைப்பின் நிர்வாகிகள் ஏற்றினர். பேரணி கடைவீதி வழியாக சென்று பேரளம் பேருந்து நிலை யத்தில் நிறைவு பெற்று அங்கே அமைக்கப்பட்ட மேடையில், நன்னிலம் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் தியாகு. ரஜினிகாந்த், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன் ஆகியோர் உரையாற்றினார்கள். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி மே தின உரையாற்றினார். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே. தமிழ்ச்செல்வி, ஜெ.முகம்மது உதுமான், பேரளம் நகரச் செயலாளர் ஜி.செல்வம் மற்றும் ஒன்றிய, நகரக் குழு உறுப்பினர்கள், சிஐடியு உள்ளிட்ட வர்க்க வெகு அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மன்னார்குடி மன்னார்குடி மஸ்தான் பள்ளி தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்சி அலுவலகம் முன்பு, ஒன்றியச் செயலாளர் கே. ஜெயபால், கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். விவசாயிகள் சங்கக் கொடியை நகரச் செயலாளர் ஜி.முத்துக்கிரு ஷ்ணன் ஏற்றி வைத்தார். நகர தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில், அரசு போக்குவரத்து பணிமனை முன்பு, மூத்த தோழர் எஸ். ஏகாம்பரம் சிஐடியு கொடியை ஏற்றி வைத்தார். பயணியர் மாளிகை, வட்டாட்சியர் அலுவலகம், தாமரைக் குளம் மேல்கரை, ரயில்வே நிலையம் உள்ளிட்ட 15 இடங்களில் சிஐடியு மற்றும் தோழமை சங்க கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. நிகழ்ச்சிகளில் சிபிஐஎம் நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன் சிஐடியு மற்றும் இணைப்புச் சங்க தலைவர்கள் ஜி.ரகுபதி, ஏ. கோவிந்தராஜ், கோபாலகிருஷ்ணன், மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கரூர் மே தின பேரணி கரூர் பேருந்து நிலையம் காமராஜர் சிலை முன்பிருந்து துவங்கி ஜவகர் பஜார், பழைய திண்டுக்கல் சாலை, லைட் ஹவுஸ் கார்னர் வழியாக வந்து பொதுக்கூட்ட மேடையில் பேரணி நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து 139 ஆவது மே தின பொதுக்கூட்டம் லைட் ஹவுஸ் கார்னரில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு முன்னிலை வகித்தார். ஏஐடியுசி மாவட்டத் தலைவர் கே.குப்புசாமி வரவேற்று பேசினார். சிஐடியு சங்க மாநில செயலாளர் டி.குமார், ஏஐடியுசி சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.துரைசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, சிபிஐ மாவட்டச் செயலாளர் கே.என். நாட்ராயன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. முருகேசன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஜி.பி.எஸ். வடிவேலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் 500 பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.