புதுக்கோட்டை, ஜன.25 - வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப் பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக சித்த ரிப்பதாகக் கூறி கண்டனம் தெரி வித்து ஊர் மக்கள் சனிக்கிழமை காலை முதல் ஊருக்குள்ளேயே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022 டிசம்பர் 26 ஆம் தேதி தெரியவந்தது. இச்சம்பவத்தில் தற்போது விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், அதே குடியிருப்பைச் சேர்ந்த 3 பேர்தான் மனிதக் கழி வைக் கலந்ததாக விசாரணையில் தெரிய வந்ததாக, இறுதி விசா ரணை அறிக்கையை மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை அளித்த னர். இந்நிலையில், பாதிக்கப் பட்டவர்கள் மீதே குற்றம் சுமத்துவ தாகக் கூறி வேங்கைவயல் கிரா மத்தினர் சனிக்கிழமை காலை ஊருக்குள்ளேயே அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தை தொ டங்கினர். இப்போராட்டத்தில் விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின ரும் பங்கேற்க வெள்ளிக்கிழமை மாலை அழைப்பும் விடுக்கப் பட்டது. இதையடுத்து, வெளிநபர்கள் கிராமத்துக்குள் வருவதைத் தடுக்கும் வகையில் வேங்கை வயல், இறையூர் கிராமத்துக்குள் வரும் 7 வழிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.