தஞ்சாவூர், நவ.7- நாகை தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெய லலிதா மீன் வளப் பல்கலைக்கழகத்தில் தமிழில் வெளியிடப்படும் ஆய்வறிக்கை கள் மூலம் மீனவர்களும், மீன் வளர்ப் போரும் பயனடைந்து வருகின்றனர் என அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நா. பெலிக்ஸ் தெரிவித்தார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழ கத்தில் மனித வள மேம்பாட்டு மையம் சார்பில், புதன்கிழமை நடைபெற்ற பழந் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றல் கற்பித்தலில் அறிவியல் தொழில் நுட்பம் குறித்த புத்தொளிப் பயிற்சி தொடக்க விழாவில் துணைவேந்தர் நா. பெலிக்ஸ் பேசினார். அவர் மேலும் பேசும்போது, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன் வளப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்கள் கல்வியை ஆங்கிலத்தில் படித்தாலும் கூட ஆய்வுக் கட்டுரைகளையும், ஆய்வ றிக்கைகளையும் ஆங்கிலத்துடன் தமி ழிலும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மீன் வளச் சுடர் என்கிற பல்கலைக்கழக இதழில் மீனவர்களுக்கும், மீன் வளர்ப் போருக்கும் பயன்படும் விதமாக ஆய்வுக் கட்டுரைகள் தமிழில் வெளியிடப்படு கிறது. இத்தொழில்நுட்பங்களைப் பயன் படுத்தி மீனவர்களும், மீன் வளர்ப்போ ரும் நடைமுறைப்படுத்தி பயன்பெறு கின்றனர். இதன் மூலம் மீன் உற்பத்தி உயர்ந்து மீனவர்களுக்கும், மீன் வளர்ப் போருக்கும் லாபம் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார். இந்த விழாவுக்கு தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் வி. திருவள்ளு வன் தலைமை வகித்தார். வளர் தமிழ்ப் புல முதன்மையர் இரா. குறிஞ்சிவேந் தன் வாழ்த்துரையாற்றினார். முன்ன தாக, பதிவாளரும் (பொ), அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைத் தலைவர் சி. தியாகராஜன் வரவேற்றார். நிறைவாக, மனித வள மேம்பாட்டு மைய இயக்குநர் ப. இராஜேஷ் நன்றி கூறி னார்.