tamilnadu

19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை!

புதுதில்லி, நவ. 1 - இந்தியாவைச் சேர்ந்த 19 நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை களை விதித்துள்ளது. ஏற்கெனவே, சுமார் 400 நிறுவனங் கள் மற்றும் தனி நபர்கள் மீது பொரு ளாதாரத் தடை விதித்திருந்த நிலை யில், அந்த பட்டியலில் தற்போது மேலும் 19 இந்திய நிறுவனங்கள், இரண்டு இந்திய நாட்டினர் சேர்க்கப் பட்டுள்ளனர். இந்த இருவரும் தில்லி யைச் சேர்ந்த நிறுவனத்தில் இயக்கு நர்களாக பணியாற்றி வருகின்றனர்.  இதுதொடர்பாக ​​வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரஷ்யாவின் சட்டவிரோதப் போரைத் தொடர உதவிய சுமார் 400 நிறு வனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கி றோம். வெளியுறவுத் துறை சார்பில் 120 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதும், நிதித்துறை சார்பில் 270-க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறு வனங்கள் மீதும், வர்த்தகத் துறை  சார்ந்த 40 நிறுவனங்கள் மீதும் பொரு ளாதாரத் தடைகள் விதிக்கப்படு கின்றன” என்று கூறப்பட்டுள்ளது.  “ரஷ்யாவுக்குச் செல்லும் ராணுவ ஆயுதங்களை தடுக்க அமெரிக்கா தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். ரஷ்யா தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்களை எங்கிருந்து வாங்குகிறதோ அதை முடக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 19 நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தவிர, சீனா, மலேசியா, தாய்லாந்து, துருக்கி மற்றும் ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.  கடந்த வாரம்தான் அமெரிக்கா வில் சட்ட விரோதமாகத் தங்கி இருந்ததாகச் சொல்லிப் பல நூறு இந்தியர்களை அமெரிக்கா வெளி யேற்றி இருந்தது. இப்போது பொரு ளாதாரத் தடைகளும் விதிக்கப் பட்டுள்ளது.