கோவை, நவ.1- விளாங்குறிச்சியில் எட்டு தளங் களுடன் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட் டப்பட்டுள்ள புதிய தொழில்நுட்ப பூங்காவை வருகின்றன 5 ஆம் தேதி முதல்வர் திறந்து வைக்க உள்ளார். என அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரி வித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் வருகின்ற 5 மற்றும் 6 ஆம் தேதி களில் கோவையில் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளார். மேலும், முடிவுற்ற பணிகள், துவக் கப்பட உள்ள பணிகள் குறித்த அறி வுப்புகளை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளனார். இந்நிலையில், முதல்வர் சுற்றுப்பயணம் மேற் கொள்ள உள்ள இடங்களை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசியதா வது, விளாங்குறிச்சியில் எட்டு தளங் களுடன் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் 2,98,000 சதுர அடி பரப்பளவில் கட் டப்பட்டுள்ள புதிய தொழில்நுட்ப பூங்காவை வருகின்றன 5 ஆம் தேதி முதல்வர் திறந்து வைக்கி றார். 6 ஆம் தேதியன்று காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பிருக்கும் மத்திய சிறைச்சாலை மைதானத் தில், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார். ஏழு தளங் களுடன் ஒரு லட்சத்து 98 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் இந்த நூல கம் அமைகிறது. கோவையில் நடைபெற்ற மூன்று மாவட்ட செயற்குழு கூட்டத் தில், நாங்கள் பேசாத கருத்துக் களை எல்லாம் ஒரு நாளிதழ் வெளி யிட்டுள்ளது. தவறான கருத்துக் களை மக்களிடையே பரப்ப வேண் டாம் என்றார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாக ரன், மாநகர காவல் ஆய்வாளர் பால கிருஷ்ணன், துணைமேயர் வெற் றிச்செல்வன், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக், வடக்கு மாவட்டச் செய லாளர் தொஅ.ரவி, தளபதி முருகே சன் உள்ளிட்ட பலர் உடனிருந்த னர்.