உதகை, நவ.1- தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்று லாப் பயணிகள் குவியத் தொடங்கி உள் ளனர். நீலகிரி மாவட்டத்தில், தற்போது ரம்யமான கால நிலை நிலவுவதாலும் தொடர் விடுமுறைக் காரணமாகவும் அண்டை மாநிலங்களான கேரளா, கர் நாடகா, ஆந்திரா, மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக் கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர். குறிப்பாக, உல கப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, படகு இல் லம், ரோஜா பூங்கா, தொட்ட பெட்டா சிகரம், பைக்காரா நீர் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதி களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இங்கு நிலவும் இதமான கால நிலையை அனுபவித்தவாறும், இயற்கை காட்சிகளை கண்டு ரசித் தும் தீபாவளி பண்டிகை மற்றும் விடுறை நாளினை கொண்டாடி மகிழ்ந்தனர்.