tamilnadu

img

தமிழ்நாடு தினம் வாழ்க! வளர்க!!

சென்னை, நவ. 1 - தமிழ்நாடு தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ் ணன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: மொழிவழி அடிப்படையில் மாநி லங்கள் அமைக்கப்பட வேண்டுமென விடுதலைப் போராட்டக்காலம் முதல்  தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி குரல்  கொடுத்து வந்தது. இதன் முன்னோட்ட மாக பிரிட்டிஷ் இந்தியாவிலேயே மொழி அடிப்படையிலான கட்சியின் மாநில அமைப்புகளையும் அமைத்தது. 1936-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட விவ சாயிகள் சங்கத்திற்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் என பெயர் சூட்டப்பட்டது.   விடுதலைக்குப் பிறகு மொழிவழி அடிப்படையிலான மாநிலங்களை அமைப்பதற்கு காங்கிரஸ் அரசு மறுத்த போது இதற்கான நாடு தழுவிய இயக்கத்தை கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கி நடத்தியது. ஆந்திரா மாநிலத்தை அமைக்க வேண்டுமென கோரி பொட்டி ஸ்ரீராமுலு நீண்ட நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த பின்னணியில் பிரதமர் நேரு நாடாளு மன்றத்தில் ஆந்தி ரா தனி மாநிலமாக அமைக்கப்படு மென அறிவித் தார்.  இதனை யொட்டி சென்னை மாநிலம், கர்நாடக ஏகிகரண சளு வளி, நவ கேரளா, சம்யுத்க மகாராஷ் டிரா ஆகிய மாநிலங்கள் மொழிவழி அடிப்படையில் அமைக்க வேண்டு மென்ற போராட்டம் வலுப்பெற்றது. போராடியவர்கள் மீது  தடியடி,  கைது, துப்பாக்கிச்சூடு போன்ற  அடக்குமுறை ஆயுதங்கள் ஏவி விடப்பட்டன. இந்தப் பின்னணியில் மாநில மறுசீரமைப்புக் குழு அமைக்கப் பட்டு அக்குழுவின் பரிந்துரை அடிப்படை யில் 1956 நவம்பர் 1-ஆம் தேதி மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

தமிழ்மொழி பேசும் மக்கள் வாழக் கூடிய பகுதிகளை தமிழகத்தோடு இணை க்க வேண்டும் என்ற போராட்டத்தின் விளைவாக சில பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டதும் இதே நாளில்தான். உருவாக்கப்பட்ட தமிழ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட வேண்டு மென பல கட்ட போராட்டங்கள் நடை பெற்றன. தமிழ்நாடு என பெயர் சூட்ட  வேண்டுமென சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட்டுகள் வலுவாக குரல் கொடுத்தார்கள்.  நாடாளுமன்றத்தில் சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டுமென்ற சட்டதிருத்த மசோதாவை முதன் முதலில் கொண்டு வந்தவர் தோழர் பி. ராமமூர்த்தி. இதே கோரிக்கையை வலியுறுத்தி சங்கரலிங்கனார் 76 நாள் உண்ணாவிரதமிருந்து மரணமடைந்தார். தனது மரணத்திற்கு பிறகு தன் உடலை கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என உயில் எழுதி வைத்தவர் சங்கரலிங்கனார். தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா முதலமைச்சரான பிறகே 1967-ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கூட்டாட்சி தத்துவம், மொழிவாரி மாநி லங்கள், மாநில உரிமைகள் மீது ஒன்றிய பாஜக அரசு தாக்குதல் தொடுக்கும் இந்தக்காலத்தில் தியாகங்களால் பெற்ற உரிமைகளை பாதுகாக்க இந்த நவம்பர் 1-இல் உறுதியேற்போம். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.