உடுமலை, நவ.1- விவசாயிகளையும் விளைநிலங் களையும் சேதப்படுத்தும் காட்டு பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை கட்டு படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 5 ஆம்தேதி வனத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த விவசாயி கள் முடிவெடுத்துள்ளனர். மேற்கு தொடர்சி மலைகளில் இருந்து வன விலங்குகள், உணவு மற் றும் குடிநீர் தேவைகளுக்கு என்று மலை அடிவார பகுதியில் உள்ள குடியி ருப்புகள் மற்றும் விவசாய நிலங்க ளுக்குள் புகுந்து விடுகிறது. ஜல்லி பட்டி, கொங்குரர் குட்டை, பொன்ன லாமன் சோலை, அமராவதி உள்ளிட்ட பகுதியில் சுமார் ஐம்பதுக்கும் மேற் பட்ட தென்னை மரங்கள் மற்றும் ஆழ்கு ழாய் கிணற்றில் உள்ள குழாய்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள் ளது. மேலும் காட்டுபன்றிகள் மலை அடிவார பகுதியில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குடி மங்கலம் ஒன்றியப்பகுதி விளை நிலங்கள் மற்றும் விவசாயிகளை தாக்கி வருகிறது. காட்டு யானைகள் தொடர்ந்து தென்னை மரங்களை சேதப்படுத்தி வரும் நிலையில், தற்போது காட்டு பன்றி கள் உடுமலை மற்றும் குடிமங்கலம் ஒன் றிய பகுதி வரை சென்று விளைநிலங் களை சேதப்படுத்தி வருவது விவசாயி களை கவலையடையச் செய்துள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகை யில் காட்டுப் பகுதியில் உள்ள விலங்கு கள் விளை நிலங்களுக்கு வர தொடங்கி வுள்ளதால், வனத்துறையினர் காட்டுப் பகுதியில் விலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்கவும், மலைப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியே வர முடியாத வகையில் மலையடிவார பகு தியில் தடுப்பு வேலி அல்லது அகலி கள் அமைத்து விலங்குகள் வராத வகை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட, தென்னை மரங்கள், விளை பயிர்க ளுக்கு உரிய இழப்பீடுகளை விவசாயிக ளுக்கு உரிய நேரத்தில் வழங்க வேண் டும். குறிப்பாக காட்டுப்பன்றியை காட்டு விலங்கு பட்டியிலில் இருந்து நீக்க வேண்டும் என்றனர். விவசாய விளைநிலங்களை காட்டு விலங்குகள் தேசப்படுத்திய நிலையில் விவசாயிகளையும் தாக்கி வருவதால் விவசாயிகளின் பயத்தை போக்கும் வகையில் வனத்துறையினர் நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி நவம்பர் 5 ஆம் தேதி விவசாயிகள் உடுமலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தின் முன்பாக போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளார்கள்.