உடுமலை,நவ.1- உடுமலை – மூணாறு சாலையில் வனவிலங்குகள் சாலையை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை விரிவாக்கம் செய்ய வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண் டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தின் எல்லைப்பகுதியான மலைப்பகுதியில் சின்னாறு வரை குறு கிய சாலையாக உள்ளது. உடுமலை 9/6 செக்போஸ்ட் பகுதியில் இருந்து சின் னாறு வரை மலைப்பகுதியில் செல்லும் சாலைகளில் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் பருக செல்லும் முக்கிய இடமாக உள்ளது. இந்நிலையில் குறு கிய சாலைப் பகுதியாக உள்ளதை விரி வாக்கம் செய்ய வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்தும் வனத் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறு கையில், உடுமலை 9/6 செக்போஸ்ட் பகுதியில் இருந்து சின்னாறு வரை சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரம் மலைப் பகுதி உள்ளது. இந்த சாலை ஒரு வாக னம் செல்லும் வகையில் சிறிய சாலை யாக உள்ளது. மழைக்கு சாலைகளின் இருபுறமும் குழி ஏற்பட்டு உள்ளதால், வாகனங்களை இறக்கி ஓட்ட முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் காட்டு யானைகள் உணவு தேவைக்கு சாலை களை கடந்து செல்லும் போது வாக னங்களை திருப்பி எடுக்க முடியாமல் அங்கேயே பயத்துடன் நிற்க வேண்டி உள்ளது என்றனர். உடுமலை மூணாறு செல்லும் மிக முக்கிய சாலை வனத் துறையின் கட்டுபாட்டில் உள்ளதால் சாலை விரிவாக்கத்தை உடனடியாக செய்ய வேண்டும் என்றனர்.