சென்னை, டிச. 28- சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 21 அன்று பொறியியல் பட்டம் படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற் படுத்தியுள்ள நிலையில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையும், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், சொந்த ஊர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களும் ஊட கங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தவே, சென்னை உயர் நீதி மன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசார ணைக்கு எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வும், அதனை ஏற்றுக்கொண்டு, வழக்கு தொடர்பாக உள்துறை முதன்மைச் செயலாளர், காவல்துறை தலைவர், சென்னை காவல்துறை ஆணையர், பல்கலைக்கழக துணைவேந்தர், பதி வாளர் ஆகியோர் விளக்கம் அளிக்கும் படி உத்தரவிட்டது. மாணவிக்கு ரூ. 25 லட்சம் இடைக்கால நிவாரணம் இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் சனிக்கிழ மையன்று (டிச.28) மீண்டும் விசார ணைக்கு வந்தது. அப்போது, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப் பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரண மாக ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தர விட்ட நீதிபதிகள், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவையும் அமைத்து உத்தர விட்டுள்ளது. சினேகப் பிரியா தலைமையில் குழு அதன்படி அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. ஆவடி துணை ஆணையர் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா உள்ளிட் டோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
மாணவியின் பக்கம் நிற்போம் : பல்கலைக்கழக நிர்வாகம் உறுதி
மாணவியின் பக்கம் நிற்போம் : பல்கலைக்கழக நிர்வாகம் உறுதி வழக்கு விசாரணையின் போது அண்ணா பல்கலைக்கழகம் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தது. அப்போது, “நடக்கக்கூடாத இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பக்கம்தான் பல்கலைக்கழக நிர்வாகம் துணை நிற்கும், 189 ஏக்கர் பரப்பளவு கொண்ட அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 8 வழிகள் உள்ளன. இந்த அனைத்து வழிகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் 988 கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளன. இதில் 849 கேமிராக்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. மாதந்தோறும் கேமராக்கள் குறித்து பரிசோதனை செய்யப்படுகிறது. தற்போது, கண்காணிப்பு கேமராவின் பதிவுகள் முழுமையாக காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு, பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி அண்ணா பல்கலைக்கழ கத்தில் தான் தனது படிப்பை தொடர்வார். காவல்துறை விசாரணைக்கு பல்கலைக் கழகம் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது” என்று உறுதி அளித்துள்ளது.
“ஒரு பெண் காதலிக்கக் கூடாது; இரவில் செல்லக்கூடாது என கூற முடியாது”
“முன்னதாக, பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. மாணவியின் அடையாளத்தை எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. செய்தியாளர் சந்திப்பு நடத்த அரசிடம் சென்னை காவல் ஆணையர் அனுமதி பெறவில்லை. எனவே, காவல் ஆணையர் அருண் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் புகார் அளித்த மாணவியின் துணிச்சல் பாராட்டத்தக்கது. பெண்ணின் விருப்பத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. ஒரு பெண் தன் விருப்பப்படி ஏன் காதல் செய்யக்கூடாது? இரவில் ஏன் தனியாக செல்லக்கூடாது? ஒவ்வொரு ஆணும், பெண்ணுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் தனிப்பட்ட தகவல்கள் வெளியானது ஏற்றுக்கொள்ள முடியாதது, துரதிர்ஷ்டமானது. பாதிக்கப்பட்ட மாணவியின் படிப்பு முடியும் வரை அவரிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கக்கூடாது. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் கசிந்ததால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக மாநில அரசு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். எதிர்காலத்தில் முதல் தகவல் அறிக்கை விவரங்கள் வெளியே கசியாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.