tamilnadu

img

தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்தது தமிழ்நாடு அரசு!

சென்னை, டிச. 28 - 2025-ஆம் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு   தலா ஒரு கிலோ  பச்சரிசி, ஒரு  கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு  வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரி யத்தையும், பண்பாட்டையும்  பிரதி பலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில்  சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடைத்  திருவிழாவாகவும், இயற் கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக் கும் அவர்தம்மோடு சேர்ந்து  உழைத்த கால்நடைகளுக்கும், நன்றி யையும்  மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும்  கொண்டாடப்படுகிறது.  2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தின ருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ  சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இதன் மூலம் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி குடும்ப  அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76  கோடி செலவு ஏற்படும்.  இவ்வாறு தமிழ்நாடு அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.  ஜனவரி 9 முதல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.