tamilnadu

img

கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம்

கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் 

சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஏப். 24 - தஞ்சாவூர் மாவட்டம், கும்ப கோணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (ஏப்24) கேள்வி நேரத்திற்குப் பிறகு, முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று  காங்கிரஸ், பாமக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில்  கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. “தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் பலரது பெயரில் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அந்த வகையில்- பன் முகத்தன்மை கொண்டவர்; பண்பாட்டுத் தளத்தில் ஆளுமை செலுத்தியவர்; அரசியல், தமிழ் இலக்கியம், திரைத்துறை என கலை ஞர் கருணாநிதி கால் பதிக்காத துறை களே இல்லை. எனவே, அவரது பெயரில் ஒரு பல்கலைக் கழகம் புதி தாக அமைக்க வேண்டும் அல்லது ஏற்கெனவே உள்ள பல்கலைக்கழகம் ஒன்றிற்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும்” என்று சிபிஎம் சட்ட மன்றக்குழுத் தலைவர் வி.பி. நாகை மாலி வலியுறுத்தினார். நிறை வாக அறிவிப்பு ஒன்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.  “தமிழ்நாட்டில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அமைத்து, உயர்கல்வித் துறையில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பதற்குக் காரணமானவர்களில் ஒருவர் கருணாநிதி. கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ள பல்வேறு திட்டங்களை உருவாக்கிக் கொடுத்துள்ள, பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிய கருணாநிதி பெயரில் அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்” என்றார்.

சென்னையில் யுபிஎஸ்சி பயிற்சி மையம்

‘நான் முதல்வன்’ சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா!

சென்னையில் ரூ. 40 கோடி செலவில் யுபிஎஸ்சி பயிற்சி மையம் அமைக்கப்படும், என்றும்; நான் முதல்வன் திட்டத்தில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளுக்கான  மானியக் கோரிக்கை  மீது நடைபெற்ற விவாதத்தில் திமுக உறுப்பினர் அ. வெற்றியழகன் பேசி னார். அவர், “நான் முதல்வன்” திட்டத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.  அதைத்தொடர்ந்து பேசிய முத லமைச்சர் மு.க. ஸ்டாலின், அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார். மேலும், “2016-ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் அதிக மான தமிழ்நாட்டு மாணவர்கள் குடி மைப் பணி தேர்வுகளில் தேர்ந்தெடுக் கப்பட்ட நிலைமாறி, 2021-இல் வெறும் 27 மாணவர்கள் மட்டும் தான் தேர்ச்சி பெற்றனர். இதைக் கவனத்தில் கொண்டுதான், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டு  தமிழ்நாட்டில் இருந்து 57 மாணவர்கள் பல்வேறு அகில இந்தியப் பணிகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், கூடுதல்  மகிழ்ச்சி என்னவென்றால், இவர்களில் 50 பேர் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்றுப் பயனடைந்தவர்கள். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் போற்றத்தக்க இந்த வெற்றியை நாம்  தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.  அதுமட்டுமல்லாமல், தேர்வில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த வேண்டும். அதற்காக சென்னையில் இருக்கக்கூடிய செ னாய் நகர் பகுதியில் 500 மாண வர்கள் தங்கிப் பயிலக் கூடிய வகை யில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பயிற்சி மையம் 40 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர் களுக்கு ஏப்ரல் 26 அன்று அண்ணா  நிர்வாக பணியாளர் கல்லூரி வளா கத்தில் பாராட்டு விழா நடத்தப்படும். அதில் நான் கலந்து கொள்கிறேன்” என்று முதலமைச்சர் தெரிவித்தார்.