tamilnadu

சித்த மருத்துவக் கல்லூரி தொடங்க ரூ. 70 கோடி வரை அனுமதி! ஆர். சச்சிதானந்தம் எம்.பி., கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

சித்த மருத்துவக் கல்லூரி தொடங்க ரூ. 70 கோடி வரை அனுமதி! 
ஆர். சச்சிதானந்தம் எம்.பி., கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் 

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்  ஆர். சச்சிதானந்தம் “என்னுடைய தொகுதி யில் போகர் சித்தர் வாழ்ந்த இடமான பழ னியில் சித்த மருத்துவக் கல்லூரியைச்  தொடங்க தமிழக அரசு விண்ணப்பித் திருக்கிறது. மேலும், இதற்கான நிலமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ் துறை யின் கீழ் சித்த மருத்துவக் கல்லூரியைத் தொடங்க ஒன்றிய அரசு எப்போது அனுமதி அளிக்கும்?” என்று கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதிலளித்த மத்திய ஆயுஷ் துறை  இணை அமைச்சர் பிரதாப்ராவ் கண்பத்ராவ்  “என்ஏஎம் மூலம் மாநிலங்களிலிருந்து ஆண்டு செயல் திட்டத்தின் மூலம் இது போன்ற  கோரிக்கை வந்தால், ஆயுஷ் துறையிட மிருந்து ரூ. 70 கோடி வரை நாங்கள் ஒப்பு தல் அளிக்கிறோம். அத்தகைய கல்லூரிகளை மாநில மற்றும்  ஒன்றிய அரசு 60:40 என்ற பங்களிப்பு விகி தத்தில் திறக்கலாம். 2013-14-ஆம் ஆண்டில்  தேசிய ஆயுஷ் ஆணையம் மூலம் ஒதுக்கப் பட்ட பட்ஜெட் சுமார் ரூ. 680 கோடியாக இருந்தது. ஆனால், 2025-26-ஆம் ஆண்டில் இந்த பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.3,992 கோடியாக அதி கரித்துள்ளது. பிரதமர் மோடியின் வழி காட்டுதலின் கீழ், எங்கள் அரசு அதை கிட்டத் தட்ட 6 மடங்கு அதிகரித்துள்ளது. அவையின் எந்தவொரு உறுப்பினரும் அத்தகைய கல்லூரிகளைத் திறக்க விரும்பி னால், மாநில செயல் திட்டத்திலிருந்து இங்கு வர வேண்டும். தற்போது இங்கு நேரடி யாக அரசுக் கல்லூரிகளை நாங்கள் வழங்க வில்லை” என்றார் அவர்.