கிறது. பொருளாதார ஆய்வறிக்கையே சுட்டிக்காட்டி யுள்ளபடி, கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட ஊதியங்கள் குறைந்துள்ளன. பொருட்களுக்கான கிராக்கி வீழ்ச்சியால் வளர்ச்சியும் மந்த மடைந்துள்ளது. அரசுச் செலவினங்களை குறைப்பதும், பணக்காரர்களுக்கு வரிச்சலுகை வழங்குவதும், தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ‘உற்சாகத்தை’ தூண்டும் என்ற கொள்கை தோல்வி அடைந்துள் ளது. வேலைவாய்ப்பையும், முதலீட்டையும்பெருக்க இது உதவவில்லை என்பதற்கான ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. 2025-26 பட்ஜெட் இந்த தோல்வியடைந்த கொள்கையின் தொடர்ச்சியே ஆகும்.
போராட்ட அறைகூவல்
இந்த மக்கள் விரோத பட்ஜெட் டிற்கு எதிராக கட்சி யின் அனைத்து அமைப்புகளும் மக்களை திரட்டி போராட்டங்களை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுக்கிறது.
அனைத்து மாநில கட்சி அமைப்புகளும் உடனடியாக செயல்பட வேண்டும்;
l மக்களை திரட்டி தெருக்களில் இறங்க வேண்டும்;
l ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்த வேண்டும்;
l தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்க வேண்டும்;
l மாநில உரிமைகளை பாது காக்கும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் -என அழைப்பு விடுத்துள்ளது.
2025-26 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் என்பது வெறும் பட்ஜெட் அல்ல. இதுநாட்டின் பொருளாதாரத்தை பெருநிறுவனங்களிடம் ஒப்ப டைக்கும் மோடி அரசின் கொள்கை அறிக்கையாகும். நாட்டின் கூட்டாட்சி அமைப்பை சீரழிக்கும் நடவடிக்கையாகும். சமூக நலத்திட்டங்களை சிதைக்கும் முயற்சியாகும். ஒட்டுமொத்த இந்திய மக்களின் வாழ்வாதா ரத்தை பாதிக்கும் துரோக நடவடிக்கையாகும். இதனை எதிர்த்து மக்கள் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.