புதுடில்லி, பிப்.2- 2025-26 ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் இந்திய மக்களின் நலன் களை முற்றிலும் புறக்கணித்து, பெரும் முதலாளிகளின் நலன்களை மட்டுமே பாது காக்கும் வகையில் ஒரு குரூரமான வஞ்சக மாக அமைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடுமையாக சாடியுள்ளது.
பொருளாதார நெருக்கடியை தீர்க்க தவறிய அரசு
நாட்டின் பல்வேறு துறைகளில் நிலவும் தேக்க நிலைக்கான அடிப்படை காரணம், பெருமளவிலான மக்களிடம் நிலவும் வாங்கும் சக்தி குறைவேயாகும். இதன் காரணமாக, உற்பத்திப பொருட்களுக்கான கிராக்கி கடுமையாக வீழ்ந்துள்ளது. பெரும் அளவிலான வேலையின்மையும், குறைந்து வரும் ஊதியங்களுமே இதற்கு காரணம். ஆனால் மோடி அரசு இந்த அடிப்படை பிரச்சனையை சரிசெய்வதற்கு பதிலாக, உயர் வருமானம் உள்ள சிறு பிரிவினருக்கு வரிச்சலுகைகள் வழங்கி, அரசுச் செல வினங்களை வெட்டிக் குறைக்கும் வழியை தேர்ந்தெடுத்துள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையே, கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழிலாளர்களின் வரு மானம் வெகுவாக குறைந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால் இந்த பட்ஜெட், அரசு செலவினங்களை குறைத்து, பணக்காரர் களுக்கு சலுகைகள் வழங்குவதன் மூலம் நாட்டில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
வளர்ச்சி என்ற பெயரில் மோசடி
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அரசுச் செலவினங்களின் பங்கு 2024-25ல் இருந்த 14.6 சதவீதத்திலிருந்து 2025-26ல் 14.2 சதவீதமாக குறையவுள்ளது. கடந்த ஆண்டின் பட்ஜெட்டில் வாக்குறுதி அளித்ததை விட சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் குறைவாகவே செலவழித்துள்ளது அரசு. இதிலிருந்து, இந்த ஆண்டு ஒதுக்கப் பட்டுள்ள நிதியும் முழுமையாக செலவழிக்கப் படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பது தெளிவாகிறது. மாநிலங்களின் உரிமைகள் பறிப்பு கடந்த ஆண்டு ஒன்றிய அரசு மாநிலங் களுக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.1,12,000 கோடி வெட்டியுள்ளது. ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதி ரூ.90,000 கோடியும், நிதி ஆணைய மானியங்கள் ரூ.22,000 கோடி யும் குறைக்கப்பட்டுள்ளன. இது கூட்டாட்சி தத்துவத்தின் மீதான நேரடி தாக்குதலாகும். மூலதன செலவினங்களிலும் ரூ.93,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. உணவு மானி யம், வேளாண்மை, கல்வி, ஊரக வளர்ச்சி, சமூக நலன், நகர்ப்புற வளர்ச்சி ஆகிய அனைத்து துறைகளிலும் நிதி வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சமூக நலத்திட்டங்களில் கடும் வெட்டு
உணவு மானியம்: கடந்த ஆண்டு ரூ.2.05 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் ரூ.7,830 கோடி குறைவாகவே செல வழிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.2.03 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி: கடந்த ஆண்டு ரூ.1.26 லட்சம் கோடி ஒதுக்கீட்டில் ரூ.11,584 கோடி குறை வாகவே செலவழிக்கப்பட்டது. இந்த ஆண்டின் ஒதுக்கீடு வெறும் 2.3% உயர்வு மட்டுமே. பணவீக்கத்தை கணக்கில் கொண்டால் உண்மையில் எந்த உயர்வும் இல்லை. வேளாண்மை: ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீட்டில் ரூ.10,992 கோடி குறைவாகவே செலவழிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு மானியம்: கடந்த ஆண்டின் ரூ.14,700 கோடியிலிருந்து ரூ.12,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் மோசடி
கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதார மான மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான (MGNREGA) நிதி ஒதுக்கீடு ரூ.86,000 கோடியில் உறைந்துள்ளது. வேலை தேவை அதிகரித்துள்ள நிலையில், இந்த குறைந்த ஒதுக்கீடு கிராமப்புற ஏழைகளுக்கு எதிரான கொடூரமான தாக்குதலாகும். 100 நாட்கள் வேலை என்ற சட்டப்பூர்வ உரிமையை இது பறிக்கிறது. விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையும் புறக்கணிக்கப் பட்டுள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்
l தாழ்த்தப்பட்டோருக்கான நிதி ரூ.27,000 கோடி வெட்டு.
l பழங்குடியினருக்கான நிதி ரூ.17,000 கோடி வெட்டு.
l வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.13,000 கோடி குறைப்பு.
l குழந்தைகள் நலத்திட்டங்களில் வெட்டு.
l பெண்கள் நலத்திட்ட நிதி 2023-24ஐ விட குறைவு - என தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
நடுத்தர வர்க்கத்திற்கு பெயரளவு சலுகை
வருமான வரி விலக்கு வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக பெருமை யாக கூறப்படுகிறது. ஆனால் இதன் மூலம் நடுத்தர வர்க்கத்திற்கு கிடைக்கும் பலன் மிகக் குறைவு. மொத்த வரிச்சலுகையில் (ரூ.1லட்சம் கோடி) பெரும்பகுதி இந்தியா வின் 1 சதவீதத்திற்கும் குறைவான பணக் காரர்களுக்கே சென்றடைகிறது. உயர் வரு மான பிரிவினருக்கு கூடுதல் வரி விதிக்கும் வாய்ப்பை அரசு பயன்படுத்தவில்லை.
அந்நிய முதலீட்டாளர்களுக்கு தாரை வார்ப்பு
l காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி
l மின்துறை தனியார்மயமாக்கல்
l பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை
l பொதுச் சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்ப்பு- என தீவிரமானதனியார்மயப் பாதை விரிவடைந்துள்ளது.
மோடி அரசின் திவால் நிலை
கிறது. பொருளாதார ஆய்வறிக்கையே சுட்டிக்காட்டி யுள்ளபடி, கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட ஊதியங்கள் குறைந்துள்ளன. பொருட்களுக்கான கிராக்கி வீழ்ச்சியால் வளர்ச்சியும் மந்த மடைந்துள்ளது. அரசுச் செலவினங்களை குறைப்பதும், பணக்காரர்களுக்கு வரிச்சலுகை வழங்குவதும், தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ‘உற்சாகத்தை’ தூண்டும் என்ற கொள்கை தோல்வி அடைந்துள் ளது. வேலைவாய்ப்பையும், முதலீட்டையும்பெருக்க இது உதவவில்லை என்பதற்கான ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. 2025-26 பட்ஜெட் இந்த தோல்வியடைந்த கொள்கையின் தொடர்ச்சியே ஆகும்.
போராட்ட அறைகூவல்
இந்த மக்கள் விரோத பட்ஜெட் டிற்கு எதிராக கட்சி யின் அனைத்து அமைப்புகளும் மக்களை திரட்டி போராட்டங்களை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுக்கிறது. l அனைத்து மாநில கட்சி அமைப்புகளும் உடனடியாக செயல்பட வேண்டும்; l மக்களை திரட்டி தெருக்களில் இறங்க வேண்டும்; l ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்த வேண்டும்; l தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்க வேண்டும்; l மாநில உரிமைகளை பாது காக்கும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் -என அழைப்பு விடுத்துள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் என்பது வெறும் பட்ஜெட் அல்ல. இதுநாட்டின் பொருளாதாரத்தை பெருநிறுவனங்களிடம் ஒப்ப டைக்கும் மோடி அரசின் கொள்கை அறிக்கையாகும். நாட்டின் கூட்டாட்சி அமைப்பை சீரழிக்கும் நடவடிக்கையாகும். சமூக நலத்திட்டங்களை சிதைக்கும் முயற்சியாகும். ஒட்டுமொத்த இந்திய மக்களின் வாழ்வாதா ரத்தை பாதிக்கும் துரோக நடவடிக்கையாகும். இதனை எதிர்த்து மக்கள் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.