tamilnadu

img

ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு-தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு-தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை, ஜன. 5- ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் னிலையில் மேற்கொள்ளப்பட்டது. சென்னை தீவுத்திடல் வளாகத்தில் தொழி லாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை  சார்பில் தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 100 தொழிலாளர்களுக்கு மானிய விலை யில் இ-ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தை முதல மைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார். மேலும், வருவாய்த் துறையில் பணிபுரி யும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர்  மேலாண்மை ஆணையரக அலுவலர்கள், சார் ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள், வட்டாட் சியர்கள் ஆகியோரின் பயன்பாட்டிற்காக 13.73 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 155 புதிய  வாகனங்களை வழங்கும் திட்டத்தை முதல மைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார். புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், திட்டம் மற்றும் வளர்ச்சித்  துறை சார்பில் மாநிலத்தில் பெண்களின் நலன், பாலின சமத்துவம் மற்றும் அனைவ ரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் வகை யில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பிற் கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்து ணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் பொதுத் துறை  கண்டுபிடிப்புகளின் கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் ஆகிய அமைப்பு களுடன் தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழு வுக்கும் இடையேயான முத்தரப்பு ஒத்துழைப்பு  மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன், தமிழ்நாடு மாநிலக் குறிக்காட்டி வரையறை-2.0-வை வெளியிட்டு, மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 ஆய்வறிக் கைகளையும் முதலமைச்சர் பெற்றுக்கொண்டார்.