100 நாள் வேலை திட்டத்திற்கு நிதியை குறைத்த ஒன்றிய மோடி அரசுக்கு எதிர்ப்பு
விருதுநகர், ஜன.6- நூறு நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றி, நிதியை குறைத்த பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசைக் கண்டித்து அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தினர் புதிய சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் நடத்தினர். விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு வடக்கு, தெற்கு ஒன்றியச் செயலாளர்கள் மாரீஸ்வரி, வளர்மதி ஆகியோர் தலைமையேற்றனர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சேகர், செல்வி ஆகியோர் துவக்கி வைத்து பேசினர். மாவட்ட பொருளாளர் கே.ஆரோக்கியராஜ் விளக்கிப் பேசினார். தெற்கு ஒன்றிய தலைவர் ராதிகா, துணைத் தலைவர் தர்மலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிவகாசி ஒன்றிய அலுவலகம் முன்பு மாநக ரத் தலைவர் தலைவர் மாரிமுத்து பாண்டியன் தலைமையேற்றார். துவக்கிவைத்து துணைத் தலைவர் வதிஷ்ட்டராஜன் பேசினார். நகரச் செயலாளர் ஸ்ரீதேவி கண்டன உரையாற்றி னார். நகர பொருளாளர் பன்னீர்செல்வம், துணைத் தலைவர் வீரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். எம்.ரெட்டியபட்டியில் ஒன்றியத் தலைவர் ஏ.குமரேசன் தலைமையில், துணைத் தலை வர் மீனாட்சி முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் என்.டி.நடராஜன் கண்டன உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் இந்துமதி, தங்கச்செல்வம், தாவீத், பாப்பாத்தி, அலங்காரமேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வத்திராயிருப்பில் தாலுகா தலைவர் சி. முகேஷ் தலைமை தாங்கினார். தாலுகா செய லாளர் பி.சக்கரியா முன்னிலை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் என்.கணேசன் துவக்கிவைத்து பேசினார். மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் சி.பெனரி, விவ சாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலை வர் சி.ஜெயக்குமார், சிபிஎம் மூத்த தலைவர் கே.முருகேசன், குன்னூர் கிளை தலைவர் எம். பழனிஜெபராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். நிறைவு செய்து மாவட்டத் தலைவர் கே.நாக ராஜ் பேசினார். நிர்வாகிகள் எம்.வனத்தாய், பி. காளீஸ்வரி, ஏ.போத்திராஜ் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு நகரத் தலைவர் பாக்கியராஜ் தலைமை தாங்கி னார். துவக்கிவைத்து நகர பொருளாளர் கே. கிருஷ்ணன் பேசினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி, கைத்தறி நெசவாளர் சங்க மாவட்டச் செயலா ளர் ராமச்சந்திரன், சிஐடியு முன்னாள் நகர கன்வீனர் சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவு செய்து நகரச் செயலாளர் பி.சரவணன் பேசினார். மாவட்டக் குழு உறுப்பி னர் ஜாகீர்உசேன், சங்க நிர்வாகி வீரமணி, பட்டு ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மதுரை மாநகர் மதுரை மாநகர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட உதவித் தலைவர் வி.மாரியப்பன் தலைமையில் போராட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் என்.மதிபாரதி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செயலாளர் டி.குமரவேல் எம்.சி., தொடங்கி வைத்தார். இதில், மாவட்டச் செயலா ளர் ஆ.பாலமுருகன், மாவட்ட பொருளாளர் பி.மணிகண்டன், மாவட்ட துணைத்தலைவர் எஸ்.செல்லம்மாள் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிறைவாக, மாவட்ட உதவித் தலைவர் எஸ்.ராமலிங்கம் நன்றி கூறினார். மதுரை புறநகர் புறநகர் மாவட்டக் குழு சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெற்றது. அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் எம்.பாண்டி தலைமை வகித்தார். துவக்கி வைத்து விவசாய தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் வி.உமா மகேஸ்வரன் பேசினார். நிறைவு செய்து மாநி லத் துணை தலைவர் கே.தவமணி பேசினார். மாவட்டக் குழு உறுப்பினர் வி.முருகானந்தம் நன்றி கூறினார். இந்த போராட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.ஆறுமுகம், எம். ராக்கம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஊமச்சிக்குளத்தில் நடைபெற்ற ஒன்றிய தலைவர் கே.பாண்டியன் தலைமை வகித்தார். துவக்கிவைத்து மாவட்டக் குழு உறுப்பினர் எம்.சௌந்தரராஜன் பேசினார். சிபிஎம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ம.தனபாலன் வாழ்த்திப் பேசினார். நிறைவு செய்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ஜீவானந்தம் பேசினார். ஒன்றி யச் செயலாளர் சி.முத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் எஸ்.வள்ளி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். டி.கல்லுப்பட்டியில் ஒன்றியச் செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் குட்டிராஜா, மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் முத்துராணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி பி.ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் வி.முருகன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் வி. சமையன் துவக்கி வைத்து பேசினார். ஒன்றிய தலைவர் முருகன், மகாலிங்கம், நாகராஜ், சின்னசாமி மற்றும் விவ சாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் காசி மாயன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்ட னர். திண்டுக்கல் திண்டுக்கல்லில் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாவட்டத் தலைவர் ஜெயந்தி, ஸ்டாலின், பால முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். ரெட்டியார்சத்திரத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு முருகானந்தம் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.சக்திவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு ஒன்றிய தலைவர் பி.முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியச் செய லாளர் ஜி.கோபிநாதன், ஒன்றிய பொருளாளர் கே.பாபு மற்றும் சக்திவேல் ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது. இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, உச்சிப்புளி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் முன்பு சட்ட மசோதா நகல் கிழிக்கும் போராட்டம் நடை பெற்றது. முதுகுளத்தூரில் தாலுகா தலைவர் எஸ். முனியசாமி தலைமை வகித்தார். தாலுகா பொருளாளர் கு.மயில்சாமி வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர் இ.முத்துராம லிங்கம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.கணேசன், தாலுகா செயலாளர் அங்குதன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். தாலுகா செயலாளர் பி.ஆரோக்கிய பிரபாகர் நிறைவுரையாற்றினார். 30 பெண்கள் உட்பட 67 பேர் கலந்து கொண்டனர். கடலாடியில் தாலுகா தலைவர் ஜே.நூர்முக மது தலைமையில் நடைபெற்றது. தாலுகா செயலாளர் உ.மயில்வாகனன் வரவேற்புரை யாற்றினார். துணைத் தலைவர் முஹம்மது சுல்தான் துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் டி.நவநீதகிருஷ்ணன், உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பிரான்சிஸ் வாழ்த்துரையாற்றினர். மாவட்ட தலைவர் எம்.ராஜேஷ் நிறைவுரையாற்றினார். தாலுகா குழு உறுப்பினர் காளீஸ்வரி நன்றி கூறினார். இப்போராட்டத்தில் 11 பெண்கள் உட்பட 24 பேர் கலந்து கொண்டனர். உச்சிப்புளியில் இராமேஸ்வரம் தாலுகா தலைவர் முத்துராமன் தலைமையில் நடைபெற்றது. தாலுகா செயலாளர் ஏ.ஹாஜா முஹம்மது வரவேற்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் என்.அரிஹரசுதன் துவக்க உரையாற்றினார். மாவட்ட துணை தலைவர் எஸ்.சீனிவாசன், மாவட்ட துணைச் செயலாளர் கே.நிழர்வேணி, மாவட்ட குழு உறுப்பினர்கள் எம். பிர்தௌஸ் கனி, எஸ்.நாகேந்திரன், நடராஜன், கோபால், பாண்டி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்டச் செயலாளர் எம்.ராஜ்குமார் நிறைவு உரையாற்றினார். இப்போராட்டத்தில் 15 பெண்கள் உட்பட 51 பேர் கலந்து கொண்டனர். கமுதியில் தாலுகா தலைவர் ஜி.சந்திரன் தலைமையில் நடைபெற்றது. தாலுகா செயலாளர் எஸ்.முருகேசன் வரவேற்புரை ஏற்றினார். தாலுகா பொருளாளர் என். ஸ்டாலின் துவக்க உரையாற்றினார். பேரூ ராட்சி நியமன உறுப்பினர் எம்.முத்து மாணிக் கம் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணை தலைவர் வி.முருகன் நிறைவுரையாற்றினார். இப்போராட்டத்தில் 25 பெண்கள் உட்பட 80 பேர் கலந்து கொண்டனர். இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 81 பெண்கள் உட்பட 222 பேர் கலந்து கொண்டனர். சிவகங்கை மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு மாவட்டக் குழு உறுப்பினர் ராஜேந்தி ரன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்டத் தலைவர் திருநாவுக்கரசு, மாவட்டக் குழு உறுப்பினர் அன்னலட்சுமி, சங்கர், காளிமுத்து, பஞ்சு, பூகண்ணன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் முனியராஜ், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் விஜயகுமார், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் முத்து ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். காளையார்கோவிலில் ஒன்றிய தலைவர் நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் முனி யாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் முத்துராமலிங்க பூபதி, ராம மூர்த்தி, தென்னரசு, ஜோதிநாதன், சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிவகங்கையில் ஊராட்சி ஒன்றிய அலுவல கம் மாவட்டக் குழு உறுப்பினர் அன்பரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய குழு உறுப்பினர் மகேஸ்வரன், மாவட்ட குழு உறுப்பினர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். கொங்கையா முருகன், மணி யம்மா, ஆறுமுகம், விஸ்வநாதன், உலக நாதன், தேவராஜ், ரத்தினம், சங்கையா, கமலா, பஞ்சவர்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
