tamilnadu

‘வந்தே மாதரம்’ விவாதத்தில் திருச்சி சிவா - எல்.முருகன் கடும் மோதல்

‘வந்தே மாதரம்’ விவாதத்தில் திருச்சி சிவா - எல்.முருகன் கடும் மோதல் 

புதுதில்லி, டிச. 10- வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதை யொட்டி நடைபெற்ற சிறப்பு விவாதத் தின்போது, நாடாளுமன்ற மாநி லங்களவையில் டிச. 9 செவ்வா யன்று திமுக உறுப்பினர் திருச்சி  சிவாவுக்கும் மத்திய இணை  அமைச்  சர் எல்.முருகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? மாநிலங்களவையில் நடை பெற்ற வந்தே மாதரம் சிறப்பு விவா தத்தில் திமுகவின் திருச்சி சிவா  பேசினார். சுதந்திரப் போராட்டத் தில் தமிழக வீரர்களின் பங்களிப்பு களை எடுத்துரைத்த அவர், வட  இந்தியாவில் தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூருவதற்கான முயற்சிகள் இல்லை என்று சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டில் திலகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கஸ்தூரிபா காந்தி, கமலா நேரு உள்ளிட்டோர் பெயர்களில் சாலைகள், திடல்கள், மருத்துவமனைகள் உள்ளன. ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த சுதந் திரப் போராட்ட வீரர்களின் பெயர் களில் சாலைகள் எதுவும் வட நாட்டில் இல்லை என்று விமர்சித்  தார். நாட்டின் பிற பகுதி மக்க ளும் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி தெரிந்துகொள்ள சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் அவர் களைப் பற்றி இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். எல்.முருகன் குறுக்கீடு அப்போது திடீரென குறுக்கிட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முரு கன், 20 ஆண்டுகள் காங்கிரஸ்-திமுக ஆட்சியில் ஏன் இதைச் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். தவறான வரலாற்றை திருச்சி சிவா சொல்வதாக ஆவேச மாக விமர்சித்தார். இதற்கு திருச்சி சிவா கடும்  எதிர்ப்பு தெரிவித்தார். “தம்பி உட்கா ருங்க... மத்திய அமைச்சர் உட்கா ருங்க” என்று கூறினார். அதே  நேரத்தில், “யோவ் உட்காருய்யா”  என்ற குரல் எதிர்க்கட்சிகள் வரிசை யில் இருந்து வெளிப்பட்டது. மாநி லங்களவைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் தலையிட்டு சமாதானப் படுத்தினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆதித்தமிழர் பேரவை கண்டனம் இந்நிகழ்வு தொடர்பாக ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் தலைவர் இரா.அதியமான் கடும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அருந் ததியர் சமூகத்தின் உரிமைகளுக் காக திருச்சி சிவா நாடாளுமன்றத் தில் குரல் எழுப்புவதை எல்.முரு கன் குறுக்கிட்டதாகக் கூறி, எல்.முரு கனை “பார்ப்பனிய நச்சு விதை” என்று சாடியுள்ளார் அதியமான். திமுக அருந்ததியர் சமூகத்திற்காக 3% உள் இடஒதுக்கீடு, மாமன்னர் ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம், வீரத்தாய் குயிலிக்கு சிலை, மாவீரன் பொல்லானின் சிலை திறப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு ள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.