tamilnadu

கல்வி நிறுவனங்களைக் காவிமயமாக்கும் போக்குகள் தடுக்கப்பட வேண்டும்: தமுஎகச வலியுறுத்தல்

கல்வி நிறுவனங்களைக் காவிமயமாக்கும்  போக்குகள் தடுக்கப்பட வேண்டும்: தமுஎகச வலியுறுத்தல்

சென்னை, பிப். 14 - கல்வி நிறுவனங்களைக் காவிமயமாக்கும் போக்கு கள் உடனடியாகத் தடுக்கப் பட வேண்டுமெனத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) வலி யுறுத்தியுள்ளது. இது தொடர்பாகச் சங் கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், மாநி லப் பொதுச் செயலாளர் களப்பிரன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், திருச்சி தேசியத் தொழில் நுட்பக் கழகத்தின் (NIT) செயல்பாடுகள் குறித்துக் கடும் கண்டனம் தெரி வித்துள்ளனர். 1964-இல் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்காக உரு வாக்கப்பட்ட இந்தத் தன் னாட்சி நிறுவனம், இன்று வரை பல்லாயிரக்க ணக்கான மாணவர்களு க்குப் பயன்மிக்க அறிவை வழங்கி வருகிறது. ஆனால், 2014-இல் மத்தி யில் ஆட்சிப் பொறுப்பேற்ற வர்கள், அறிவியல் நிறுவ னங்களுக்குள் தங்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளை வலிந்து திணிப்பதாகத் தமுஎகச குற்றம் சாட்டி யுள்ளது. இதன் ஒரு பகுதி யாக, திருச்சி என்ஐடி-யில் பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் நடை பெறவுள்ள மண்டல அளவி லான கருத்தரங்கை, ஆர். எஸ்.எஸ்-இன் துணை அமைப்பான ஏபிவிபி-யுடன் (ABVP) தொடர்புடைய ‘SHODH’ என்ற அமைப்பு டன் இணைந்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அறிவியல் தொழில் நுட்பம் பயிற்றுவிக்கும் நிறு வனத்திற்குள் இத்தகைய அமைப்புகளைக் கொல் லைப்புறம் வழியாக அனு மதிப்பது, அதன் 60 ஆண்டு காலச் செயல்பாட்டில் விழும் கரும்புள்ளியாகும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு இந்தக் கருத்தரங்கை நிறுத்திட வேண்டும் எனவும், அங்குள்ள பேராசி ரியர்களும் மாணவர்களும் இதனைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் தமுஎகச கோரிக்கை விடுத்துள்ளது.