tamilnadu

img

புதிய பேருந்து சேவையினை துவக்கி வைத்தார் போக்குவரத்து அமைச்சர்

புதிய பேருந்து சேவையினை துவக்கி வைத்தார் போக்குவரத்து அமைச்சர்

பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் புதிய பேருந்து சேவைகளை, அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.  பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சின்ன வெண்மணி கிராமத்தில், மாவட்ட ஆட்சியயர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், வியாழக்கிழமை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் அரியலூர் - திட்டக்குடி சாலை பேருந்தினை, சின்னவெண்மணி கிராமத்தின் வழியாக வழித்தடத்தை நீட்டிப்பு செய்தும், புதிய பேருந்தையும் துவக்கி வைத்து பொதுமக்களுடன் பயணம் செய்தார். பெரம்பலூர் இதைத் தொடர்ந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், பெரம்பலூரில் இருந்து செட்டிகுளம் மற்றும் பெரம்பலூரில் இருந்து லப்பைகுடிகாடு ஆகிய பகுதிகளுக்கு 02  நகர புதிய பேருந்து சேவைகளை, மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில்,  தொடங்கி வைத்து பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்தார்.  இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன், கும்பகோணம் மண்டல போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநர் இரா. பொன்முடி, திருச்சி மண்டல போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் முத்துகிருஷ்ணன், கோட்ட மேலாளர் புகழேந்தி ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  புதுக்கோட்டை புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 14 புதிய பேருந்து வழித்தட சேவைகளை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வியாழக்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டையில் இருந்து திருக்கோகர்ணம், முத்துடையான்பட்டி, நார்த்தாமலை வழியாக கீரனூருக்கும், புதுக்கோட்டையில் இருந்து நமணசமுத்திரம், திருமயம், கடியாபட்டி வழியாக ராயவரத்திற்கும், புதுக்கோட்டையில் இருந்து மருத்துவக் கல்லூரி, வடவாளம், மழையூர் வழியாக துவாருக்கும், புதுக்கோட்டையில் இருந்து திருச்சி, முசிறி, நாமக்கல் வழியாக சேலத்திற்கும், அறந்தாங்கியில் இருந்து வல்லவாரி, சித்தாதிகாடு வழியாக பேராவூரணிக்கும், அறந்தாங்கியில் இருந்து மேலப்பட்டு, நாகுடி, வேதியன்காடு வழியாக காரக்கோட்டைக்கும், அறந்தாங்கியில் இருந்து காரைக்குடி, மேலூர் வழியாக மதுரைக்கும் புதிய பேருந்து வழித்தட சேவைகள் இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டது. மேலும், கந்தர்வகோட்டையில் இருந்து செங்கிப்பட்டிக்கும், கந்தர்வக்கோட்டையில் இருந்து கறம்பக்குடிக்கும், திருச்சியில் இருந்து கீரனூருக்கும், இலுப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்கும், பொன்னமராவதியில் இருந்து சடையம்பட்டிக்கும், புதுக்கோட்டையில் இருந்து கொத்தமங்கலத்திற்கும், இலுப்பூரில் இருந்து கீரனூருக்கும் என ஆகமொத்தம் 14 புதிய பேருந்து வழித்தட சேவைகள் இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டது என்றார். தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வகோட்டை), வை.முத்துராஜா, (புதுக்கோட்டை), முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே. செல்லப்பாண்டியன், பொதுமேலாளர் கே.முகமதுநாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  அரியலூர் ஜெயங்கொண்டம் பேருந்துநிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் சார்பில், ஜெயங்கொண்டத்திலிருந்து காடுவெட்டி, அணைக்கரை, சுத்தமல்லி, ஆர்.எஸ். மாத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு மகளிர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 4 புதிய மகளிர் விடியல் பயண நகர பேருந்துகளை, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் பொன்முடி, ஜெயங்கொண்டம் தாசில்தார் சம்பத், திமுக சட்டதிட்ட திருத்த குழு இணைச் செயலாளர் சுபா. சந்திரசேகர், நகர்மன்றத் தலைவர் சுமதி சிவகுமார், திமுக நகரச் செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான வெ.கொ. கருணாநிதி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் பொதுமக்கள் என பல