பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்ற நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழியாகச் செல்லும் ரயில்கள் குழித்துறையில் பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும்
நாகர்கோவில், ஜன.28- நாகர்கோவிலில் இருந்து திரு வனந்தபுரம் வழியாக பிற மாவட் டங்கள், மாநிலங்களுக்கு இயக் கப்படும் ரயில்கள் குமரி மாவட்டம் குழித்துறையின் நின்று செல்ல வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி தெற்கு ரயில்வே துறையிடம் வலியுறுத்தியுள்ளதாவது: குமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியிலி ருந்து குமரி மாவட்டம் எல்கை வரையிலான அனைத்து ரயில் நிலையங்களும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துடன் உள்ளது. அதனால் திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் நாகர்கோவில் கோட்டார் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்க ளை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். திருவனந்தபுரத்தி லிருந்து நெல்லை வழியாக சென்னை மற்றும் பிற மாநிலங்க ளுக்கு குறிப்பிட்ட ரயில்களை மட்டுமே இயக்குகிறது. ஆனால் திருவனந்தபுரத்தி லிருந்து அதிகப்படியான ரயில் களை பிற மாவட்டங்கள் வழியாக பிற மாநிலங்களுக்கு இயக்கி வரு கிறது. பெரும்பாலான ரயில்களை நாகர்கோவில் கோட்டரில் நிறுத்தி விட்டு இங்கிருந்து பயணி களை ஏற்றாமல் சென்று திரு வனந்தபுரத்தில் வைத்து இயக்கு கின்றனர். நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்திற்கு ரயில்கள் நிறுத்தும் இடமாகவே மாறிவிட்டது. அந்த அளவிற்கு இங்குள்ள ரயில் நிலை யங்களை பயன்படுத்தும் திரு வனந்தபுரம் ரயில்வே கோட்டம், நாகர்கோவிலில் இருந்து இயக்கப் கடும் பெரும்பாலான ரயில்கள் குமரி மாவட்டத்தில் எங்கும் நின்று பயணிகளை ஏற்றாமல் நேரடியாக திருவனந்தபுரம் செல்கிறது. குறிப்பாக ரயில் எண். 22503-கன்னியாகுமரி-திப்ரூகார் எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தின் 7 நாட்களும் கன்னியாகுமரியில் இருந்து மாலை 3.25 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் மட்டும் நின்று விட்டு திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, நெல்லூர், விஜயவாடா, விசாகப் பட்டணம், புவனேஸ்வர் வழியாக திப்ரூகார் சென்றடைகிறது. மறு தட ரயில் எண். 22504 திப்ரூ காரில் இருந்து அதே வழியாக கன்னியாகுமரிக்கு இரவு 9.45 மணிக்கு வந்தடைகிறது. 4,188 கிலோ மீட்டர் பயணிக்கும் இந்த ரயில், 4 நாட்களில் சென்றடைகி றது. இந்த ரயில் குமரி மாவட் டம் குழித்துறையின் நின்று பயணி களை ஏற்றி இறக்கி சென்றால் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலத் தில் உள்ள குமரி மாவட்டத்தினர் அதிக அளவில் பயன் பெறு வார்கள். அதைப்போல், ரயில் எண். 22620-திருநெல்வேலி-பிளாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருநெல்வே லியில் இருந்து காலை 12.35 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வழியாக திருவனந்த புரம், கொல்லம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், அரக் கோணம், நாக்பூர் வழியாக பிளாஸ்பூர் சென்றடைகிறது. 22619 என்ற எண்ணில் பிளாஸ்பூரில் இருந்து இதே வழியாக திரு நெல்வேலி வந்தடைகிறது. இந்த ரயிலும் குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் மட்டுமே நிற்கி றது. இந்த ரயிலும் குழித்துறையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். ரயில் எண். 16329 மாஜின் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 5. 20 மணிக்கு நாகர்கோவி லில் இருந்து புறப்பட்டு திரு வனந்தபுரம் வழியாக கொல்லம், கோட்டயம், ஆலுவா, கோழிக் கோட்டிலிருந்து மங்களூர் சென்ற டைகிறது. 16330 என்ற எண்ணில் மங்களூரில் இருந்து இதே வழி யாக நாகர்கோவிலுக்கு இரவு 10.5 மணிக்கு வந்தடைகிறது. இந்த ரயில்களும் குமரி மாவட்டம் குழித் துறையில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். மேலும், ரயில் எண்.16336-நாகர்கோவில்-காந்திதாம் எக்ஸ்பி ரஸ் ரயில் மதியம் 2.45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம், கொல் லம், எர்ணாகுளம், ஆலுவா,திருச் சூர், கண்ணுர், மங்களூர், உடுப்பி, ரத்தினகிரி, அகமதாபாத் வழியாக காந்திதாம் சென்றடைகிறது. 16335 என்ற எண் ரயில் காந்திதாமிலி ருந்து இதே வழியாக நாக்கோவி லுக்கு மாலை 6.15 மணிக்கு வந்த டைகிறது. இந்த ரயிலும் குழித்து றையில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். இது போல் குமரி மாவட்டத் தின் வழியாக இயக்கப்படும் அனைத்து ரயில்களும், மாவட் டத்தின் முக்கிய ரயில் நிலையங்க ளில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். கன்னி யாகுமரியிலிருந்து நெல்லை மார்க்கமாக சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் அதிகப் படியான ரயில்கள் இயக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.
